Tamil Nadu Weather Rain Latest News Updates: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவ. 21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நவ.23ஆம் தேதி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்ட. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (நவ. 20) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Crime | அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது இதுதான்!
அதேபோல், இன்று திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென்மாவட்டங்களில் மழை மேகங்கள் குவிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கும் நிலையில், இன்று தென் தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று (நவ. 20) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய இந்த எச்சரிக்கை நாளை காலை 8.30 மணிவரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Special rains continue in Nagai, Ramanthapuram and Manjolai belts. Till tomorrow these rains will continue and then these places will also get some break.
From minus, now delta has caught with these heavy rains and gone into positive zone.
Tamil Nadu as a whole for this NEM… pic.twitter.com/jN4kI3giRB
— Tamil Nadu Weatherman (@praddy06) November 20, 2024
நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா...?
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுகாவில் உள்ள பேச்சிப்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களிலும், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற கடலோர மாவட்டங்களிலும் தற்போது அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதியாகவில்லை.
மேலும் படிக்க | தமிழக ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ