EPF Pensioners Latest Updates: 60 வயது முதல் ஓய்வூதியத் தொகை பெறத் தொடங்கினால், மாதம் மாதம் அதிக பென்சன் தொகையை பெறலாம்.
EPFO Extra Pension: ஓய்வூதியதாரர்கள் 8% கூடுதல் பென்ஷன் பெறுவது குறித்து நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதிக ஓய்வூதியத் தொகை பெறுவது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.
இபிஎஸ் என்பது இபிஎப்ஓ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் மற்றும் டிஏ பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன் காரணமாக இபிஎப்ஓ அதன் பங்குதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
ஒரு பங்குதாரர் பெறும் ஓய்வூதியத்தின் அளவு என்பது பங்குதாரரின் பங்களிப்பு மற்றும் வயதை பொருத்ததாகும். ஒருவர் வருங்கால வைப்பு நிதியில் பத்து வருடங்கள் தனது பங்களிப்பை செய்திருந்தால், அவர் 58 வயதை பூர்த்தி செய்து பிறகு, அவருக்கு ஓய்வூதியம் கட்டாயம் கிடைக்கும்.
அதேநேரத்தில் இபிஎப்ஓ சந்தாதாரர் 58 வயதுக்கு பதிலாக, 60 வயதில் இருந்து ஓய்வூதியம் பெறத் தொடங்கினால், அவருக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். 58 வயதிற்கு பதிலாக 60 வயதில் ஓய்வூதியம் பெற தொடங்கினால் சாதாரண ஓய்வூதியத் தொகையை விட 8 சதவீதம் கூடுதல் தொகையை ஓய்வூதியமாக பெறுவீர்கள்.
எந்தவொரு ஊழியரும் தங்கள் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை 10 வருடம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) செலுத்தி இருந்தால், அந்த ஊழியர் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள்.
எந்தவொரு ஊழியரும் இபிஎஃப் கணக்கில் 10 ஆண்டுகளுக்கு குறைவான காலம் மட்டும் பணத்தை செலுத்தி இருந்தால் ஓய்வூதியத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட தொகையை இடையில் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம்.
ஓய்வூதியம் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலம் பணத்தை செலுத்தி இருந்தால் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு அதாவது 58 வயதிலிருந்து இபிஎப்ஓ நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இபிஎப்ஓ கணக்கில் உங்களின் பத்து வருட சேவை காலம் முடிந்தாலும், உங்கள் வயது 50 முதல் 58 வயது வரை இருந்தால் மட்டுமே நீங்கள் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் இதில் உங்களுக்கு குறைவான ஓய்வூதியம் கிடைக்கும்.
நீங்கள் 58 வயதிற்கு முன்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் நான்கு சதவீதம் குறைக்கப்படும். ஒரு நபர் 56 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்தை திரும்ப பெறுகிறார் என்று வைத்துக் கொண்டால், அதன்பிறகு அவர் அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92 சதவீதம் மட்டுமே பெறுவார்.
இபிஎப்ஓ கணக்கில் உங்களின் பத்து வருட சேவை காலத்தை முடித்திருந்தாலும், உங்கள் வயது 50 வயதுக்கு குறைவாக இருந்தால் நீங்கள் ஓய்வூதியத் தொகையை கோர முடியாது. அத்தகைய சூழ்நிலையில் வேலையை விட்டு நீங்கள் வெளியேறினால், நீங்கள் இபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட நிதியை மட்டுமே பெறுவீர்கள். எனவே 58 வயது முதல் ஓய்வூதியம் என்பதே கிடைக்கும்.
இபிஎப்ஓ சந்தாதாரர் 58 வயதுக்கு பதிலாக, 60 வயது முதல் ஓய்வூதியத் தொகை பெறத் தொடங்கினால், அவருக்கு சாதாரணமாக கிடைக்கும் ஓய்வூதியத் தொகையை விட 8 மடங்கு அதிக ஓய்வூதியத் தொகையை பெறலாம்.