நீரிழிவா? பித்தமா? கட்டியா? தூதுவாளை இருந்தால் வேறென்ன தேவை?

Thuthuvalai for Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவ பண்புகள் கொண்டவை ஆகும். உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளையின் சூப்பர் குணங்கள் இவை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2022, 01:26 PM IST
  • மருத்துவ நன்மைகளின் சுரங்கம் தூதுவளை
  • தூதுவளையை தொடர்ந்து பயன்படுத்தினால் ஆரோக்கியம் நிச்சயம்
  • உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளையின் சூப்பர் குணங்கள்
நீரிழிவா? பித்தமா? கட்டியா? தூதுவாளை இருந்தால் வேறென்ன தேவை? title=

தூதுவளை நமது உடல் வலிமையையும் மனதின் திறனையும் மேம்படுத்தக்கூடியது என சித்த மருத்துவம் கூறுகிறது. அது மட்டுமல்ல, நீரிழிவுக்கு மாமருந்தாக செயல்படுகிறது தூதுவளை என்பது நிதர்சனமான உண்மை.  தூதுவளையை தினசரி சில இலைகளை மென்று தின்றால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். தூதுவளையின் சாற்றில் உள்ள எத்தனாலிக் என்ற பண்பு, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. தூதுவளை இலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும், ஆரோக்கியம் மேம்படும்.

தூதுவளைக்குக், சிங்கவல்லி என்ற பெயரும் உண்டு. தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை ஆகும். தூதுவளை இலையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையலாக செய்து சாப்பிடலாம். இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதுமட்டுமல்ல, தூதுவளைக் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். 

மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள்

தூதுவளையை உலர்த்தி பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். இது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.

தூதுவளையின் இலை மட்டுமல்ல, பூவையும் உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்தலாம். இந்த பொடியை பாலில் கலந்து அருந்தி வருவதால் உடல் வலுவடையும். தூதுவளையின் இலை, பூ இரண்டையும் போலவே, இதன் பழத்தை காயவைத்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | Cholesterol Signs: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தென்படும், ஜாக்கிரதை!!

தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது தேன் கலந்து சாப்பிடலாம். இது, மார்புச்சளி, இருமல் போன்றவற்றை நீக்கும். அதேபோல, உடலில் நச்சுத்தன்மையை நீக்கும் தன்மையும் தூதுவளை பழத்தின் பொடிக்கு உண்டு.  

புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் அனைத்தும் தூதுவளையில் உள்ளது. புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் காக்கும் ஆற்றல் தூதுவளைக்கு உண்டு. எந்தவித கட்டிகளும் ஏற்படாமல் காக்கும் தன்மை கொண்டது என சித்த மருத்துவம் சொல்கிறது.  

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

பொதுவாக, இருமல் மற்றும் சளிக்கு தீர்வாக பயன்படுத்தப்படும் தூதுவளை, காசநோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சுவாச பிரச்சனைகளை போக்க பயனப்டுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்

மேலும் படிக்க | உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தை உயரமாக வளர இதை செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News