ஆரோக்கியமா ஃபிட்டா இருக்க இந்த 5 சூப்பர்ஃபுட் காலை உணவில் கட்டாயம் இருக்கனும்

Breakfast Boosters: காலை உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான அடித்தளமாகும். உங்கள் காலை உணவில் சில நல்ல விஷயங்களை சேர்த்துக் கொள்வது அவசியம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2023, 10:42 AM IST
  • காலை உணவிற்கு சிறந்தவை
  • பசியை கட்டுப்படுத்தும் காலை உணவுகள்
  • உடல் எடையை கட்டுப்படுத்தும் பிரேக்ஃபாஸ்ட்
ஆரோக்கியமா ஃபிட்டா இருக்க இந்த 5 சூப்பர்ஃபுட் காலை உணவில் கட்டாயம் இருக்கனும் title=

எடை மேலாண்மை என்பது அழகுக்கான விஷயம் மட்டுமல்ல, அது ஆரோக்கியத்திற்கான படிக்கல்லாக இருக்கிறது. உடல் எடையை அளவாக வைத்திருப்பதற்கான பயணம் பெரும்பாலும் சிறிய, கவனமான தேர்வுகளுடன் தொடங்குகிறது, அதற்கு காலை உணவு தொடக்கப்புள்ளியாக இருக்கும். இரவு உணவுக்குப் பிறகு, நீண்ட நேரம் நமது உடலுக்கு உணவு இல்லாத நிலையில், காலையில் உண்ணும் உணவு மிக முக்கியமான உணவாக இருக்கிறது. 

காலை உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான அடித்தளமாகும். உங்கள் காலை உணவில் சில நல்ல விஷயங்களை சேர்த்துக் கொள்வது அவசியம் என உணவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

சியா விதைகள்
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய சியா விதைகள், காலை உணவுக்கு மிகவும் சிறந்தவை. தண்ணீரில் ஊறவைத்து சியா விதைகளை பயன்படுத்தலாம். ஏனென்றால், இந்த விதைகளை திரவத்தில் ஊறவைக்கும்போது, அவை விரிவடைந்து ஜெல் போன்ற நிலைக்கு மாறுகின்றன. பசையுள்ள இந்த விதைகள், பசியை போக்கி, நிறைவான உணர்வை ஊக்குவிக்கிறது.

அவ்வப்போது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், சிறுபசிக்காக தீனி உண்ணும் பழக்கம் குறையும் என்பதோடு, எடை இழப்பு இலக்குகளை விரைவில் அடைய உதவுகிறது. காலை உணவில் தயிரில்  சியா விதைகளை கலந்து, ஒரு ஸ்மூத்தியாக பயன்படுத்தலாம். அதேபோல,  ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை தயாரிக்க உங்கள் ஓட்மீலில் சியா விதைகளை சேர்க்கலாம்.  

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் உணவுகள்!

அவகேடோ
சுவையான பழமான அவகேடாவை பழமாக உண்டாலும் சரி, வேறு உணவுகளுடன் சேர்த்து உண்டாலும் அது மிகவும் ஆரோக்கியமானது. அதிலும், காலையில் அவகேடாவை எடுத்துக் கொள்வது கூடுதல் நன்மைகளை வழங்கும். அவகேடாவில் உள்ள கிரீமி அமைப்பு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிரம்பியது.

நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள்  காலை உணவில் அவகேடா இருந்தால் அது அருமையான ஊட்டச்சத்து உணவாகவும், உடல் எடையை குறைக்க சிறந்த தேர்வாகவும் இருக்கும்.

avacado

மஞ்சள்

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள், எடை மேலாண்மைக்கான ஒரு ஆற்றல்மிக்க பொருளாக உருவாகி வருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. அலர்ச்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்ட மஞ்சள் மங்கலகரமானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று.

ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் எடை இழப்புக்காக மிகவும் பிரபலமானது. ஆப்பிள் சைடர் வினிகரை பானமாக மாற்றி காலை வேளையில் சேர்த்துக்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், முழுமையின் உணர்வை ஊக்குவிக்கவும் உதவும். ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். இருப்பினும், ஆப்பிள் சைடர் வினிகரை அளவுடன் பயன்படுத்தவும்.  
 
இலவங்கப்பட்டை
அருமையான சுவைக்கு மட்டுமல்ல இலவங்கப்பட்டை எடை இழப்புக்கும் உதவும் அற்புதமான மசாலா ஆகும். இந்த மசாலா இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் மற்றும் மிகவும் சீரான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். உங்கள் காலை ஓட்மீல், தயிர் அல்லது உங்கள் காபியில் கூட இலவங்கப்பட்டையை தூவி சுவையாக மாற்றலாம். எடை குறைப்புக்கும் இது உதவும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பயறு வகைகளில் ராணி காராமணி! நீரிழிவை போக்கும், எலும்புகளை வலுவாக்கும் தட்டைப்பயறு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News