தட்டம்மை நோய்கள் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய ஒன்று. இவை முதன்முதலில் சுவாச மண்டலத்தை அதிகம் பாதிக்கின்றன என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகளை அதிகம் தட்டமை பாதிக்கும். குழந்தைகள் எளிதான இலக்கு என்பதால், இதில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
தட்டம்மையால் உயிரிழப்புகளும் ஏற்படும். உலகளவில் தட்டம்மையால் கணிசமானோர் உயிரிழப்பை சந்திக்கின்றனர். இதற்கு தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபின்னர், பெருமளவிலான உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க |கொலஸ்ட்ராலை கரைக்கணுமா? இவற்றை உடனே உங்கள் உணவில் சேர்க்கவும்
தட்டம்மை பாதிப்பு என்பது, அரம்ப கட்டத்தில் அவர்களுக்கே தெரியாது. முதல் 10 முதல் 14 நாட்களில் அவர்களுக்கு ஒரு சில அறிகுறிகள் உடலில் காட்டும். அதனை வைத்து தங்களுக்கு தட்டம்மை உள்ளது என்பது அறிந்து கொள்ள முடியும். தட்டம்மை தொற்று இருந்தால் என்னென்ன அறிகுறிகள் வரும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
தட்டம்மையின் அறிகுறிகள் என்ன?
தட்டம்மை தொற்று ஏற்பட்ட முதல் 10 முதல் 14 நாட்களுக்கு இருமல் இருக்கும். காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், சிவந்த கண்கள், தொண்டை வலி, வாயில் வெள்ளை புள்ளிகள் உள்ளிட்டவை இருக்கும்.
பிறருக்கு பரவும் ஆபத்து
தட்டம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆபத்து உள்ளது. இதனால் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாருக்கும் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. குழந்தைகளுக்கு வந்திருந்தால் அவர்களால் அறிகுறிகளை தெளிவாக சொல்ல முடியாது. பெற்றோர் கூடுதல் கவனம் எடுத்து, பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் இந்த 5 பழங்களை கட்டாயம் சாப்பிடலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR