முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள். முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், ரத்த சோகை முற்றிலும் நீங்கும்.
முருங்கை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும். இதுமட்டுமின்றி, முருங்கைக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பல வகையான தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும். முருங்கை இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எனவே முருங்கை இலையின் நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
முருங்கை கீரையின் நன்மைகள்
எடை இழப்புக்கு உதவும் முருங்கை கீரை:
உடல் பருமனை குறைக்க வேண்டுமானால் (Weight Loss Tips) முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால், அதிகரித்த எடையைக் குறைக்க பெரிதும் உதவும்.
நீரிழிவு நோய்க்கு உதவும் முருங்கை கீரை:
நீரிழிவு நோய்க்கு முருங்கை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முருங்கை காய்கள், பட்டை மற்றும் இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை:
இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம் குறித்த இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், முருங்கைகாய் கஷாயம் அருந்திய பங்கேற்பாளர்களுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கீல்வாதம் - யூரிக் அமிலம்
முருங்கை டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இந்த கலவைகள் முழு உடலிலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன, இதன் காரணமாக உடலில் உள்ள யூரிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் கீல்வாதத்தின் வலியும் குறையத் தொடங்குகிறது.
இதயத்திற்கு இதமாகும் முருங்கை கீரை:
மேலும் படிக்க | கல்லீரல் முதல் நுரையீரல் வரை... வியக்க வைக்கும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்!
முருங்கை கீரையில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
புண்களுக்கு மருந்தாகும் முருங்கை கீரை:
முருங்கை இலைகளை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும். இது அல்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அல்சர் அபாயத்தைத் தடுக்க இது உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை:
முருங்கை இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குறைவாக சாப்பிடணும்... வயிறு நிறைவாகவும் இருக்கணுமா... ‘இந்த’ டிப்ஸ் உதவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ