வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு Oximeter எவ்வளவு அவசியம் என்பதை அறிக

கொரோனா நோயாளிகளுக்கு சுவாசிக்க சிரமப்படும்போது அவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கும். வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர்களை வழங்கும் வசதியை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 24, 2020, 08:14 PM IST
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு Oximeter எவ்வளவு அவசியம் என்பதை அறிக title=

லைஃப்ஸ்டைல்: கொரோனா வைரஸ் (Coronavirus In India) மிக வேகமாக பரவி வருகிறது, நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, குறைவான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் சில நிபந்தனைகளுடன் வீட்டிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சுவாசிக்க சிரமப்படும்போது அவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கும். வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர்களை (Oximeter) வழங்கும் வசதியை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுவாசிக்க சிரமப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் வழங்க முடியும். ஆக்சிமீட்டர் என்றால் என்ன மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு இது எவ்வாறு உதவுகிறது என்பது தான் கேள்வி. ஆக்சிமீட்டர் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆக்சிமீட்டர் (Oximeter) என்பது ஒரு சிறிய சாதன இயந்திரமாகும். இது நோயாளியின் விரலில் பொருத்தப்படும். இதன்மூலம் நோயாளின் இதயத்துடிப்பு மற்றும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் (oxygen) அளவு வெளிப்படும். அதன் காரணமாக நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு சரிபார்க்கப்படுகிறது. நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் இந்த இயந்திரம் ஆபத்து பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளைக் கண்காணிப்பதில் இது பயன்படுத்தப்படுகிறது. சுவாச நோயுடன் போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிமீட்டர் பொருத்துவதன் மூலம், நோயாளிக்கு கூடுதல் ஆக்ஸிஜன் தேவையா? தேவையில்லையா என்பது குறித்து எச்சரிக்கும்.

இந்த இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது?

நாடித் துடிப்பு ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) இயந்திரம் உங்கள் தோலில் ஒரு ஒளியை செலுத்தும். இது இரத்த அணுக்களின் நிறத்தையும் அவற்றின் இயக்கத்தையும் கண்டறிகிறது. சரியான அளவு ஆக்ஸிஜனைக் கொண்ட இரத்த அணுக்கள் பிரகாசமான சிவப்பு நிறமாகவும், மீதமுள்ளவை அடர் சிவப்பு நிறமாகவும் தோன்றும். இரத்த அணுக்கள் மற்றும் பிற இரத்த அணுக்களின் விகிதத்தின் அடிப்படையில் இயந்திரம் ஆக்ஸிஜன் செறிவூட்டலை கணக்கிடுகிறது. அதாவது சரியான ஆக்ஸிஜன் உள்ளடக்கத்துடன் பிரகாசமான சிவப்பு மற்றும் அடர் சிவப்பு இரத்த அணுக்கள் குறித்து கண்காணிக்கும்.

ஒரு சாதாரண ஆரோக்கியமான நபரின் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் செறிவு நிலை 95 முதல் 100 சதவீதம் வரை இருக்கும். ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால், அந்த நபரின் நுரையீரலில் ஒருவித அவுசகரியம் ஏற்படும். 92 சதவீதத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் அளவு (Oxygen Leavel) என்பது நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பொருள். காரணம் அவருக்கு ஆக்ஸிஜன் ஆதரவும் தேவைப்படலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, நாடித் துடிப்பு ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) நோயாளிகளின் உடலில் உள்ள "கோவிட் நிமோனியா" அளவை காட்டும். இது கடுமையான கொரோனா நோயாளிகளுக்கு பொதுவாக இருப்பது. கொரோனா வைரஸ் ஸ்கிரீனிங் மற்றும் சோதனை செயல்பாட்டில் நாடித் துடிப்பு ஆக்சிமீட்டரின் பங்கு குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் முன்பே தெரிவித்துள்ளார். அதாவது ஆக்சிமீட்டர் உதவியுடன், கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்பகால நோயறிதலைக் கொண்டிருக்க முடியும். இது இறப்பைக் குறைக்க உதவும் என்று கூறினார்.

Trending News