எடை குறைய டயட் சார்ட்: உடல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. உடல் எடையை குறைக்க, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இதனுடன் உங்கள் உணவிலும் சில பல மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்களின் உடல் எடை மிகவும் அதிகரித்து, அதைக் குறைக்க நீங்கள் விரும்பினால், உங்களுக்காக மிகவும் பயனுள்ள டயட் சார்ட்டை நாங்கள் இன்று இங்கே கொண்டு வந்துள்ளோம். இதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் 20 நாட்களில் உங்களின் உடல் எடையை ஜெட் வேகத்தில் குறைக்க முடியும். அந்த டயட் சார்டின் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
டயட் சார்ட்: காலை நேர உணவில் இதை சாப்பிடுங்கள்
தினமும் காலையில் எழுந்ததும் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடிக்கவும். இதை குடிப்பதால், உங்கள் இரத்த ஓட்டம் சீராகி, வாயு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளும் விலகும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை
செய்முறை: ஒரு குவளையில் வெள்ளரியை போட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறிது நேரம் கிளாஸில் அப்படியே விட்டு, பின் அந்த தண்ணீரை குடிக்கவும்.
அதேபோல் காலை உணவில் சாம்பாருடன் மற்றும் தோசை அல்லது இட்லி எடுத்துக்கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து, கிரீன் டீ குடிக்கவும். காலை 11 மணி அளவில் டீ குடித்தால் உடல் எடை குறையும்.
டயட் சார்ட்: மதிய நேர உணவில் இதை சாப்பிடுங்கள்
பொதுவாக மதிய உணவில் குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு, ஓட்ஸ் சப்பாத்தியுடன் ஒரு முழு கிண்ணம் காய்கறிகளை சாப்பிடலாம். இதனுடன், உங்கள் மதிய உணவில் தயிர் மற்றும் சாலட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு, சுமார் 4 மணி கழித்து இளைநீர் குடிக்கவும். இது உடலில் ஏற்படும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவும்.
டயட் சார்ட்: இரவு நேர உணவில் இதை சாப்பிடுங்கள்
இரவு உணவில் நீங்கள் காய்கறி போட்டு சூப் செய்து குடிக்கலாம். இதனுடன், கருப்பு பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றையும் சாப்பிடலாம். எடை இழப்புக்கு பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இந்த உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால் இவை உடல் எடையை குறைக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ