துளசி பால் நன்மைகள்: பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ள பால் ஒரு முழுமையான உணவு என அழைக்கப்படுகிறது. நம் உடலுக்கு நன்மை பயக்கும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆனால், அதில் சில பொருட்களை சேர்ப்பதால், பாலின் ஆரோக்கிய நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும். அவற்றில் ஒன்று துளசி இலைகள். துளசி மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. மேலும், இந்து மதத்தில், இது தெய்வமாக வணங்கப்படுவதால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இந்த செடி காணப்படுகிறது. துளசி இலையை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால், பல நோய்களில் இருந்து விடுபடலாம் என இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
துளசி இலையை பாலில் கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. ஆஸ்துமா நோய்
நீங்கள் ஆஸ்துமா அல்லது சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விடுபட, துளசி இலைகளை பாலில் கொதிக்க வைத்து குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம், ஆஸ்துமா நோயாளிக்கு மிகுந்த நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
2. ஒற்றைத் தலைவலி
தற்போதைய காலகட்டத்தில், நமது வாழ்க்கை முறை காரணமாக ஒற்றைத் தலைவலியினால் அவதிப்படுவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. துளசி மற்றும் பால் தொடர்ந்து உட்கொண்டால், இந்த பிரச்சனையை வேரில் இருந்து அகற்றலாம்.
3. மனச்சோர்வு
பரபரப்பான வாழ்க்கை முறை, அலுவலக பணிச்சுமை, குடும்ப பிரச்சனைகள், காதல் தோல்வி, கடன் போன்ற காரணங்களால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், துளசி பாலை உட்கொள்வதன் மூலம், அனைத்து வகையான மன அழுத்தங்கள் நீங்கி, மன பதற்றமும் நீங்கும்.
4. சிறுநீரக கல்
தற்போது, துரித உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை உண்பதால் சிறுநீரக கல் பிரச்சனை அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், துளசி இலைகளை பாலில் கொதிக்க வைத்த பிறகு குடித்தால் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக வலி பிரச்சனை நீங்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ