மஞ்சளில் ரசாயன கலப்படம்... மூளை - இதயத்தை காலி செய்யும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

மஞ்சளில், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 12, 2024, 02:33 PM IST
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளில் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.
  • உடலில் கால்சியம் போல செயல்படும் ஈயம் எலும்புகளில் படிகிறது.
  • லீட் குரோமேட் ரசாயனம், குழந்தைகள் முதல் பெயர்வர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தானது.
மஞ்சளில் ரசாயன கலப்படம்... மூளை - இதயத்தை காலி செய்யும் என மருத்துவர்கள் எச்சரிக்கை title=

மஞ்சள் இந்திய சமையலறையின் தங்க மசாலா (Golden Masala) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் நிறைந்திருக்கும் சத்துக்களும், மருத்துவ பண்புகளும் எண்ணற்றவை. உணவில் மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் மஞ்சள்.

மஞ்சளில் உள்ள முக்கிய கலவையான குர்குமின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது புற்று நோய் போன்ற கொடிய நோய்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆனால், மஞ்சளை பயன்படுத்துவதால் இந்த நன்மைகளை பெற முடியாது என்பதோடு, அதனால், பாதிப்பு உண்டாகும் அளவிற்கு கலப்படங்கள் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சளில், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

'சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரன்மென்ட்' (Science of The Total Environment) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்தியாவின் பாட்னா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் பெஷாவரில் கிடைக்கும் மஞ்சள் மாதிரிகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட அபாயகரமான அளவில் ஈயம் இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்திய தரநிலைகள் ஆணையம் (FSSAI) நிர்ணயித்துள்ள 10 மைக்ரோகிராம்/கிராம் என்ற வரம்பை விட 200 மடங்கு அதிகம் ஈயம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கவுகாத்தி மற்றும் சென்னையில் உள்ள மஞ்சள் மாதிரிகளிலும் அதிக அளவு ஈயம் இருப்பது கண்டறியப்பட்டது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளில் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. அதுவும் மஞ்சள் போலவே இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளில் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. அதுவும் மஞ்சள் போலவே இருக்கும். இது பெயிண்ட், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பீங்கான் பூச்சுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் என்பது குறிப்பிடத்தக்கது. லீட் குரோமேட்டை மஞ்சளுடன் கலப்பதால், மூளை தொடர்பான நோய்கள், இதய கோளாறுகள் ஆகியவை ஏற்படுகின்றன. 

லீட் குரோமேட் ரசாயனம், குழந்தைகள் முதல் பெயர்வர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தானது. அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சில தீவிர நிலைகளில் கோமா அல்லது இறப்பை கூட ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்து நிறைந்தது.

மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வாழ வைக்கும் வாழைக்காயை அடிக்கடி சேர்த்துகோங்க

ஈயம் என்னும் லீட் என்பது ஒரு கன உலோகமாகும். உடலில் கால்சியம் போல செயல்படும் ஈயம் எலும்புகளில் படிகிறது. ஈயத்தை அதிகமாக உட்கொள்வது மூளை, இதயம் மற்றும் சிறுநீரகங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அறிவுத் திறனை பாதிப்பதுடன், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபட்ட மன நல பிரச்சனைகள் ஏற்படும். அதே சமயம் பெரியவர்களுக்கு சோர்வு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கலப்பட மஞ்சளை தவிர்க்க செய்ய வேண்டியவை

 சுத்தமான மஞ்சளை பெற, ஆர்கானிக் மஞ்சளைத் தேர்ந்தெடுத்து, வீட்டிலேயே அரைத்து அதைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கலப்படத்தின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், மஞ்சள் விநியோகச் சங்கிலியில் ஈயம் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அதன் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? காலையில் இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News