Best Breakfast For Health: காலை உணவு நமது உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக, சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கை முறை நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும் காலை உணவு மிக முக்கியமானது.
Oats
ஓட்ஸ் ஒரு மிகச்சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. ஓட்ஸ் உட்கொள்வது ஆயுட்காலத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், அது பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் என்றும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்ஸ் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. குறிப்பாக கவனம் மற்றும் நினைவாற்றலை ஆகியவற்றை இது மேம்படுத்துகிறது. இதுமடுமின்றி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் லைஃப்ஸ்டைல் மெடிசினில் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக 105 வயதுடைய ஒரு பெண்மணியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஓஹியோவில் உள்ள சேலம் குடும்பப் பராமரிப்பின் குடும்ப மருத்துவரான டாக்டர் மைக் செவில்லா, இந்த ஆய்வில், ஓட்ஸ் சாப்பிடுவது அகால இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
ஓட்ஸ்: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்
ஓட்ஸ் சுவையானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றது. இதில் இரும்புச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை காலை உணவில் உட்கொள்வதன் மூலம் நாளின் தொடக்கத்தில் ஆற்றலையும் வலிமையையும் உடல் பெறுகிறது.
இதயத்திற்கு நன்மை பயக்கும்
ஓட்மீலில் பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஓட்மீலை தொடர்ந்து உட்கொள்வது கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஓட்மீலில் செலினியம் மற்றும் தாமிரம் போன்ற சில தாதுக்கள் உள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இந்த தாதுக்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை வலுப்படுத்துவதாக ஹெல்த் ரிப்போர்ட்டர் கூறுகிறது. இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. குளிர்காலத்தில் சளி மற்றும் பிற பருவகால நோய்களைத் தடுக்க ஓட்ஸ் சாப்பிடுவது உதவியாக இருக்கும்.
செரிமானத்திற்கு உதவும்
ஓட்ஸ் ஜீரணிக்க மிகவும் எளிதானது. இது வயிற்றுக்கும் நன்மை பயக்கும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் செரிமான செயல்முறையை ஓட்ஸ் மேம்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முகத்தில் உள்ள தொப்பையைக் கரைத்து அழகான வடிவத்தைப் பெற எளிய பயிற்சி!
மேலும் படிக்க | ஒரு மாதம் டீ குடிக்கவில்லை என்றால்... உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ