இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாம்பியன் டிராபி தொடரில் ஜடேஜா நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்நிலையில் இந்த அணியை குறித்து அஸ்வின் தனது youtube சேனலில் பேசியிருந்தார். அதில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஜடேஜாவை நான்காவது இடத்திலும், அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை விளையாட வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வருகிறார்.
ஜடேஜா குறித்து பேசிய அஸ்வின்
"ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் பேட்டி திறன் அதிகம் வெளிவரவில்லை, காரணம் அவர் மிகவும் கீழே பேட்டி இறங்குகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் அதே நிலை தான். அவரை டாப் ஆர்டரில் அனுப்பினால் அணியின் தேவையை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடலாம். இந்திய அணியில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இருவருமே டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர்கள். ஜடேஜாவை நான் எப்போதும் உயர்வாகவே மதிப்பிடுவேன். ஜடேஜா நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார், அவருக்கு பிரஷர் சிச்சுவேஷனில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஐபிஎல்லில் 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்துள்ளார். அவரை டாப் ஆர்டரில் விளையாட வைப்பது சிறப்பான விஷயமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் இந்தியா
இந்திய அணி கடந்த ஆண்டு முழுவதுமே பெரிதாக ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்தவில்லை. கடைசியாக இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. அதில் வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே மற்றும் ரிஷப் பந்த் போன்ற வீரர்களை 4வது இடத்தில் களமிறக்கி சோதனை செய்தனர். ஆனாலும் அந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் 98 இன்னிங்ஸ்களில் 32.42 சராசரியில் மொத்தம் 2756 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது 7வது இடத்தில் களமிறங்கி வரும் ஜடேஜா, இதுவரை 2 முறை 4வது இடத்தில் களமிறங்கி உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், மற்றும் ஜடேஜா.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு: பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ