IND vs ENG: வாஷிங்டன் சுந்தர் இல்லை! இவருக்கு தான் வாய்ப்பு! இந்தியாவின் பிளேயிங் 11!

India Playing XI For 1st T20I Vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

Written by - RK Spark | Last Updated : Jan 22, 2025, 12:07 PM IST
  • முதல் டி20யில் வாஷிங்டன் சுந்தர் அவுட்.
  • இளம் ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு.
  • இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி.
IND vs ENG: வாஷிங்டன் சுந்தர் இல்லை! இவருக்கு தான் வாய்ப்பு! இந்தியாவின் பிளேயிங் 11! title=

India Playing XI For 1st T20I Vs England: இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற இப்போது இருந்தே போட்டி நிலவுகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெற்றுள்ள சில வீரர்கள் டி20 தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்த டி20 தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு... ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

சூர்யகுமார் யாதவ் கேப்டன்

சூர்யகுமார் யாதவ் தலைமையில் கடைசியாக விளையாடிய இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றுள்ளது. கொல்கத்தா மைதானம் சுழற் பிறந்துவீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருக்கும் என்பதால் அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவர்கள் மட்டுமே இன்றைய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாசிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். சமீபத்திய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி ஆல் ரவுண்டராக அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. கொல்கத்தாவில் டியூ வரும் என்பதால் அதற்கேற்றார் போல் அணியை தேர்வு செய்வோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

"இரவு நேரத்தில் கொல்கத்தாவில் கடுமையான பணி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதனால் அதற்கு ஏற்றார் போல் தயாராகி வருகிறோம். பயிற்சியின் போதும் ஈரமான பந்துகளை வைத்து தான் விளையாடுகிறோம். அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி கிடைக்கும்" என்று சூர்யகுமார் யாதவ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்திய அணியில் ஷமி

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ஷமி இடம்பெற்றுள்ளார். டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள ஷமி தீவிர பயிற்சியில் உள்ளார். கடைசியாக 2023 ஒரு நாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார் அதன் பிறகு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வந்தார்.

"அணியில் ஒரு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் இருப்பது எப்போதுமே நல்லது தான். நீண்ட நாட்களுக்கு பிறகு ஷமி அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அவருடன் நீண்ட நாட்களாக பயணித்துக் கொண்டிருக்கிறேன், மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்துள்ளார்.  அவரை மீண்டும் மைதானத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது, அவரும் சிறப்பாக வந்து வீசி வருகிறார் அவர் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது" என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் , வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு: பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News