Budget 2025: ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் டபுள் பரிசு? கூடுதல் ஓய்வூதியம், கம்யூட்டேஷன் விதிகளில் மாற்றம்

Central Government Pensioners: லட்சக்கணக்கான ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனை அமைப்பின் (NC JCM) ஊழியர்கள் தரப்பு, கம்யூடட் பென்ஷனுக்கான காலத்தை தற்போதைய 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

Budget 2025 Expectations: ஊழியர் அமைப்புகளின் ஆதரவு மற்றும் நிபுணர் பரிந்துரைகள் அதிகரித்து வரும் நிலையில், கம்யுடேஷன் பென்ஷன் மற்றும் கூடுதல் ஓய்வூதிய வயதில் மாற்றம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் 2025 பட்ஜெட்டின் ஒரு முக்கிய அம்சமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், அது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அமைப்புகளை பெரிய அளவில் மாற்றும். 

 

1 /11

இன்னும் சில நாட்களில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதற்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் கம்யுடேஷன் பென்ஷன், அதாவது ஓய்வூதிய மறுசீரமைப்பு கோரிக்கையை பரிசீலிக்குமாறு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, ​​ஓய்வூதிய மறுசீரமைப்பு காலம் 15 ஆண்டுகளாக உள்ளது. இதை 12 ஆண்டு காலமாக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 /11

லட்சக்கணக்கான ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனை அமைப்பின் (NC JCM) ஊழியர்கள் தரப்பு, கம்யூடட் பென்ஷனுக்கான காலத்தை தற்போதைய 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

3 /11

சமீபத்திய கடிதத்தில், NC JCM இன் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, அரசாங்கம் 11 ஆண்டுகளுக்குள் முழு ஓய்வூதியத்தையும் வட்டியுடன் மீட்டெடுக்கிறது என்று வாதிட்டார். பல மாநில அரசுகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் மாற்றப்பட்ட பகுதியை மீட்டெடுப்பதாகவும் அந்தக் கடிதம் கூறியுள்ளது. "40% மாற்றப்பட்ட ஓய்வூதியத்தை ஓய்வூதியதாரர்களிடமிருந்து 15 ஆண்டுகளுக்கு மீட்டெடுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை." என்று கூறப்பட்டுள்ளது.

4 /11

கடந்த காலங்களில், மத்திய அரசு ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் ஓய்வூதியத்தின் மாற்றப்பட்ட பகுதியை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக மீட்டெடுப்பதற்கான காலக்கெடுவைக் குறைக்கும் இந்த திட்டத்துடன் உடன்பட்டுள்ளனர். பல்வேறு மத்திய துறைகளில் உள்ள சுமார் 7 லட்சம் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு, கடைசியாக மத்திய அமைச்சரவை செயலாளர் டிவி சோமநாதனுக்கு கடிதம் எழுதி, ஓய்வூதிய மாற்ற விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

5 /11

1981 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய மாற்ற) விதிகளின் விதி 10A ஐ திருத்தி, ஓய்வூதிய மாற்ற விதிகள் 38 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த அளவுருக்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அளவுருக்கள் குறிப்பாக வட்டி விகிதம், ஆயுட்காலம், இறப்பு விகிதம், உண்மையான மதிப்புகள் மற்றும் ஆபத்து காரணி ஆகியவை பெரிய அளவில் மாறியுள்ளன என்று கூட்டமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

6 /11

5வது ஊதியக்குழு அறிக்கையும் ஓய்வூதிய கம்யுடேஷன் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க பரிந்துரைத்ததை அறிக்கையை குறிப்பிட்டுள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் பல அளவுருக்கள் மாறிவிட்டதால், 1986 ஆம் ஆண்டு காமன் காஸ் (மேல்) வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்த விஷயத்தில் புதிதாக மீண்டும் ஆராயப்பட வேண்டியதற்கான காரணத்தை விளக்கும் விரிவான குறிப்பையும் கூட்டமைப்பு இணைத்துள்ளது.

7 /11

5வது ஊதியக் குழு ஒரு ஆழமான ஆய்வுக்குப் பிறகு கம்யுடேஷன் கால அளவை 12 ஆண்டுகளாக குறைக்க பரிந்துரைத்தது. மத்திய அரசு இந்த அறிக்கையை ஏற்கவோ நிராகரிக்கவோ இல்லை. ஆகையால், ஊதியக்குழுவின் அந்த பரிந்துரை சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

8 /11

இந்த பிரச்சனையை தீர்க்க, கூட்டமைப்பு, 1981 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய பரிமாற்றம்) விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. திருத்தப்பட்ட ஓய்வூதிய அட்டவணைக்கான கோரிக்கையும் வைக்கபட்டுள்ளத்ய். 12 ஆண்டு ஓய்வூதிய மறுசீரமைப்பு காலம் "தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிக்கிறது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டுவரும்" என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

9 /11

கம்யுடேஷன் விதிகளுடன் கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது குறித்தும் நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. தற்போது உள்ள விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. ஆனால் 65 வயது முதல் 75 வயது வரைதான் பொதுவாக அதிக பணத்திற்கான தேவை இருக்கிறது. அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது.

10 /11

நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 65 வயதிலிருந்து 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை 5% அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. விரைவில் இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

11 /11

ஊழியர் அமைப்புகளின் ஆதரவு மற்றும் நிபுணர் பரிந்துரைகள் அதிகரித்து வரும் நிலையில், கம்யுடேஷன் பென்ஷன் மற்றும் கூடுதல் ஓய்வூதிய வயதில் மாற்றம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் 2025 பட்ஜெட்டின் ஒரு முக்கிய அம்சமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், அது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அமைப்புகளை பெரிய அளவில் மாற்றும்.