ஞானசேகரனுக்கு என்ன ஆச்சு? அதிகாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை வலிப்பு வந்ததால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Jan 22, 2025, 08:01 AM IST
  • புழல் சிறையில் இருந்த ஞானசேகரனுக்கு வலிப்பு.
  • அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
  • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானசேகரனுக்கு என்ன ஆச்சு? அதிகாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! title=

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கடந்த மாதம் 25-ந்தேதி கைது செய்தனர். இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகையில் வருகிறது மாற்றம்? இனி ரூ.1000 இல்லை?

மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயரில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு மற்றும் இந்த வழக்கு குறித்தான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை மேலும் விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். அவரது வழக்கை விசாரிக்க அதிகாரப்பூர்வ அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையான மனு தாக்கல் செய்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், விசாரணை தொடர்பான ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியது.

தொடர் விசாரணை

சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், போலீசார் ஞானசேகரனை சிறையில் இருந்து எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையை முடித்த பின்னர், அவரை அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு மேலும் தீவிர விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். முந்தைய சோதனையின் போது ஞானசேகரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மடிக்கணினியில் பெறப்பட்ட சில தகவல்களை வைத்து ஞானசேகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் விவரங்கள் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படாமல் இருப்பதை காவல்துறை உறுதி செய்கிறது.

ஞானசேகரனுக்கு வலிப்பு

புழல் சிறையில் இருந்த ஞானசேகரனுக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வலிப்பு ஏற்பட்டதும் சிறை காவலர்கள் வார்டனுக்கு தெரிவித்து சிறை மருத்துவமனையில் முதற்கட்ட முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு ஞானசேகரனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க | சென்னை விஜிபியில் இருவருக்கு பாலியல் சீண்டல்... ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News