பச்சை இஞ்சி, அதாவது இஞ்சியை பச்சையாக சாப்பிடுவது மருத்துவ பயன்களை அள்ளிக் கொடுக்கும். பச்சையாக இஞ்சி சாப்பிடுவது கொழுப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது, கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால், இன்றே உணவில் பச்சை இஞ்சியை சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இஞ்சியை பச்சையாக எடுத்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால், ஒற்றைத் தலைவலி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்க பெரிதும் உதவும். அதன் மருத்துவக் குணங்கள் முழுமையாக கிடைக்கும் . இதைத் தவிர, இஞ்சியை பச்சையாக இஞ்சி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு
வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இஞ்சியில் ஏராளமாக உள்ளன, இதன் காரணமாக பல நோய்கள் அகற்றப்படுகின்றன. மறுபுறம், இஞ்சியை பச்சையாக உட்கொள்வதன் மூலம், சளி மற்றும் இருமல் போன்ற வைரஸ் தொற்றுகளை பெருமளவில் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!
செரிமான சக்தி வலுப்படும்
இது தவிர, செரிமானத்தை வலுப்படுத்தவும் இஞ்சி பெரிதும் உதவுகிறது. இதை சாப்பிடுவதால் செரிமான செயல்முறையும் மேம்படும். இது தவிர, இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
வாந்தியை போக்கும்
உங்களுக்கு வாந்தி ஏற்பட்டால் பச்சை இஞ்சியை உட்கொள்ளலாம். இது நிச்சயமாக உங்களுக்கு உதவும். சரியான நேரத்தில் மாதவிடாய் வராத பெண்களும் பச்சையாக இஞ்சியை சாப்பிடலாம். இதன் மூலம் அவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியும் நிவாரணம் பெறும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR