முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கணுமா: இந்த எளிய வழிகளால் செய்யலாம்

Double Chin Home Remedies: இரட்டை கன்னம் பெரும்பாலும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. ஆனால் இந்த நிலை இருந்தால், உங்கள் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 07:42 PM IST
  • சப்மென்டல் ஃபேட் என்றும் அழைக்கப்படும் இரட்டை கன்னம், அதாவது டபுள் சின் பிரச்சனை தற்போது அனைவரையும் படுத்தி வருகிறது.
  • இந்த பிரச்சனைக்கு சூடான துண்டு கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்
  • தினமும் நான்கு வேளை காய்கறிகளை சாப்பிடுங்கள்.
முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கணுமா: இந்த எளிய வழிகளால் செய்யலாம்  title=

முகத்தின் கொழுப்பை குறைப்பது எப்படி: சப்மென்டல் ஃபேட் என்றும் அழைக்கப்படும் இரட்டை கன்னம், அதாவது டபுள் சின் என்பது உங்கள் கன்னத்தின் கீழ் கொழுப்பு அடுக்கு உருவாகும்போது ஏற்படும் பொதுவான நிலையாகும். இரட்டை கன்னம் பெரும்பாலும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. ஆனால் இந்த நிலை இருந்தால், உங்கள் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 

வயதாவது, மரபியல் அல்லது தளர்வான தோல் ஆகியவற்றாலும் இரட்டை கன்னம் பிரச்சனை ஏற்படலாம். இரட்டை கன்னம் எனப்படும் டபுள் சின் பிரச்சனை உங்களுக்கும் இருந்து அதை நீங்கள் அகற்ற விரும்பினால், நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.

சூடான துண்டு கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்: 

இந்த சிகிச்சையின் மூலம், உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம். இதைச் செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி, சிறிது நேரம் குளிர்விக்க காத்திருக்கவும். பிறகு ஒரு டவலை எடுத்து தண்ணீரில் நனைக்கவும். டவலை நன்றாக பிழிந்து தண்ணீரை வெளியேற்றுங்கள். இதற்குப் பிறகு, உங்கள் முகத்தில் துண்டை மெதுவாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 15 நிமிடங்கள் இந்த செயல்முறையை செய்யுங்கள்.

சூயிங்கம்: 

ஊடக அறிக்கைகளின் படி, சூயிங்கம் முகத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. நீங்கள் எதையாவது நீண்ட நேரம் மெல்லும்போது, ​​உங்கள் தாடைகளில் லேசான வலி ஏற்படுகிறது. இதனால் உங்கள் முகத்தில் கொழுப்பு குறைகிறது. வலி மோசமாகத் தொடங்கும் போது, ​​மெல்லுவதை நிறுத்துங்கள். ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மணி நேரம் கம் மெல்ல முயற்சி செய்யுங்கள். நீங்கள் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் மெல்ல வேண்டிய அவசியமில்லை. அவகாசம் விட்டு விட்டும் இதை செய்யலாம். 

மேலும் படிக்க | பருவில்லாத பளபளக்கும் முகம் வேண்டுமா: சுலபமான கைவைத்தியம் 

உடற்பயிற்சி செய்யுங்கள்: 

நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் மறுக்க முடியாதது. நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதோடு உங்கள் சகிப்புத்தன்மையும் மேம்படும்.

- தினமும் நான்கு வேளை காய்கறிகளை சாப்பிடுங்கள்.
- தினமும் மூன்று வேளை பழம் சாப்பிடுங்கள்.
- சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக முழு தானியங்களை சாப்பிடலாம்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
- கோழி, மீன் போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள அசைவ உணவுகளை உண்ணுங்கள்.
- ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கார்ப் பொருட்களை சாப்பிடுங்கள்.
- பொரித்த பொருட்களை தவிர்க்கவும்.
- குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுங்கள்.
- சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும்.

மேலும் படிக்க | Weight Loss Drinks: கோடையில் இந்த பானங்களை குடித்தால், சட்டுனு எடையை குறைக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News