Dieting Can trigger acidity: டயட்டிங்கால் அசிடிடி ஏற்படும் தெரியுமா? இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது?

உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்போது அதன் பக்கவிளைவாக அசிடிடி  எனப்படும் அமிலத்தன்மை உடலில் ஏற்பட்டு, ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 5, 2021, 04:11 PM IST
  • டயட்டிங்கால் அசிடிடி ஏற்படும் தெரியுமா?
  • அசிடிடி ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி?
  • சிக்கலில்லாத உடல் எடை குறைப்பு வழி எது?
Dieting Can trigger acidity: டயட்டிங்கால் அசிடிடி ஏற்படும் தெரியுமா? இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது? title=

புதுடெல்லி: நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படை ஆரோக்கியமான உடல் என்றால், ஆரோக்கியத்திற்கான அளவுகோல் ஒருவரின் வயது மற்றும் உயரத்திற்கேற்ற உடல் எடை இருப்பது ஆகும்.

உடல் எடை அதிகம் இருப்பவர்கள், கச்சிதமான உடல்வாகைப் பெறவும், எடையை குறைக்கவும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், உணவு கட்டுப்பாடு செய்யும்போது அதன் பக்கவிளைவாக அசிடிடி (acidity) எனப்படும் அமிலத்தன்மை உடலில் ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களைத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?    

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உணவே அருமருந்தாகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், இருக்கும் எடையை அப்படியே பராமரிக்க விரும்புபவர்களும் உணவு கட்டுப்பாடு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைத் தேர்வு செய்கின்றனர்.

இதனால், வெவ்வேறு உணவுகளை முயற்சி செய்கிறார்கள். அதிகப்படியான எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பது அவசியமானது தான் என்றாலும், தங்களின் உடலுக்கு ஏற்ற உணவு முறையைப் பின்பற்றாததால் கடுமையான எதிர்விளைவுகளையும், பக்கவிளைவாக  எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

READ ALSO | முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுதால், நீங்கள் இழப்பது ஏராளம்

டயட்டிங் செய்வதற்காக போதுமான அளவு உணவு சாப்பிடாமல் இருப்பது உடலில் அசெளக்ரியம் மற்றும் தீவிரமான அசிடிடியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிக எடையுடன் இருப்பதும் ஆபத்துதான். 

ஹைபராசிடிட்டி (hyperacidity) ஒரு பொதுவான நிகழ்வு, ஆனால் அதை உடனடியாக சமாளிக்க வேண்டும். குடல் அளவுக்கு ஏற்ற எடையை விட அதிக எடையில் ஒருவர் இருந்தால், அவருடைய ஓசோபாகல் தசைகள் மற்றும் வால்வுகளுக்கு (oesophagal muscles and valves) அதிக அழுத்தம் ஏற்படும். எனவே அவை தேவைக்கேற்ப சரியாக இயங்காது. அதனால்தான், பருமனானவர்கள், தங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 அதில், உண்வுக்கட்டுப்பாடு முக்கியமானது. ஆனால் அதை கடைபிடிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடலுக்கு உகந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதிக வாயுவான உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது.

பீன்ஸ், சோடா, வெங்காயம், இனிப்புப் பதார்த்தங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக் கூடிய காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உட்கொள்வதைக் குறைப்பது அவசியமானது.

ALSO READ | Baking Soda: நன்மைகள் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

அமிலத்தன்மையின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

"weight cycling" என்றும் அழைக்கப்படும் யோ-யோ டயட் (Yo-yo dieting) என்னும் எடை இழப்பு முறையை தவிர்ப்பது நல்லது. யோ யோ டயட் என்றால் என்ன? முதலில் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைப்பது, பிறகு கட்டுப்பாட்டை விட்டுவிட்டு நன்றாக உணவு உண்டு மீண்டும் எடையை அதிகரிப்பது, மீண்டும் உடல் எடையை குறைத்து அதிகரிப்பது என்று மாதிரியை weight cycling அல்லது Yo-yo dieting என்று அழைக்கின்றனர். 

இந்த வகை எடை இழப்பு முறையை கடைபிடிப்பவர்கள், தங்கள் உணவு பழக்கவழக்கத்தை அடிக்கடி மாற்றுவதோடு, உண்ணும் உணவின் அளவையும், தன்மையையும் மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இது அமிலத்தன்மை, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதிகம் சாப்பிடுவதும் அசிடிடியை ஏற்படுத்தலாம் என்பதுபோலவே, அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பதாலும் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கலாம்.

உணவை ஜீரணிக்க உங்கள் வயிறு அமிலத்தை உற்பத்தி செய்கிறது. அதனால் தான் உணவு உண்ணாமல் இருக்கும்போது, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதை கவனித்திருக்கலாம்.   அளவுக்கு அதிகமாக உணவு உண்பதும் அசிடிட்டியை ஏற்படுத்தும் என்பதால், நாம் என்ன உண்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு உணவுக் கட்டுப்பாட்டு முறையையும் தேர்ந்தெடுப்பதற்கு முன், துறைசார் நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.  

READ ALSO | எருமைப்பாலின் நன்மைகள் மற்றும் பயன்கள் என்னென்ன? 

வயிற்றில் அசிடிடி உருவாவதற்கு என்ன சாப்பிடுகிறோம் என்பதைத் தவிர பல்வேறு காரணங்களும் உள்ளன. அவை:  

1.உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
2. அதிக உணவையோ அல்லது அதிக கொழுப்புச்சத்துள்ள உணவையோ உண்ட பின் உடனே படுத்து தூங்குவது 
3. அதிக உப்பு மற்றும் குறைந்த நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது
4. மது அருந்துவது
5. புகைபிடித்தல்
6. கார்பனேற்றப்பட்ட பானங்கள், பழச்சாறுகள் மற்றும் சோடாக்களை இரவு நேரத்தில் பருகுவது

இவை அனைத்தும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள் என்பதோடு உங்கள் மன அமைதியைத் திருடும் காரணிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

உறங்குவதற்கு முன்னதாக அளவான உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அடிப்படை அளவீடாக வைத்துக் கொள்ளவும். 

ALSO READ | Weight Loss Tips: எடையை குறைக்க 100% பலனளிக்கும் சூப்பர் டிப்ஸ்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News