இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். மாறும் வாழ்க்கை முறையால், உடல் உழைப்பு குறைந்து போவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் நோய்களுக்கு மூலக்காரணம் ஆகிறது. வாழ்க்கை முறை மாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் செல்வது ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று நடைபயிற்சி. அதிலும், வெறும் காலில் நடக்கும் பழக்கம் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. உண்மையில் வெறும் கால்களில் நடப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?
வாக்கிங் போகும்போது, புல்வெளிகளில் இருக்கும் பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடந்தால், அது காயங்களை ஆற்றும். காயங்களை ஆற்றும் பச்சை புல்லின் ஆற்றல், பல நன்மைகளை கொடுக்கிறது.
மேலும் படிக்க | பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
பொதுவாக ஷூ அல்லது விதவிதமான காலணிகளை போட்டுக் கொண்டு நடக்கும்போது ஏற்படும் அனுபவத்திற்கும், பசுமையான புல்லின் மீது நடப்பதற்கும் உள்ள வித்தியாசம், காலுக்கு ஏற்படும் உணர்வு மாறுபாடு மட்டும் அல்ல, அது ஆரோக்கியத்திற்கான மாறுபாடு ஆகும்.
தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்க பச்சை புல் மீது வெறுங்காலுடன் நடப்பது பயனளிக்கும். தூக்க நேரம் மற்றும் தூக்க சுழற்சியை சரிசெய்யும். செல் பாதிப்பு காரணமாக நமது உடலில் வீக்கம் ஏற்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பது பூமியின் எலக்ட்ரான்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
கொரோனா தொடங்கியதில் இருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. நீங்கள் தொடர்ந்து காலையில் பச்சை புல் மீது நடைபயிற்சி செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Benefits of Brisk Walk: மன அழுத்தத்தை குறைக்கும் வேகமான வாக்கிங்
கண்களின் நரம்பு மண்டலத்துடன் இணைந்திருக்கும் நமது பாதங்களில் அழுத்தப் புள்ளி உள்ளது, பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது இந்த அழுத்தப் புள்ளியைத் தூண்டுகிறது. இது உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும்.
விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சிகள், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உடலின் பாகம், பூமியில் நேரடியாக படும் போது கால் நிலையை சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலின்
சமநிலை, ப்ரோபிரியோசெப்சன் மற்றும் உடல் விழிப்புணர்வு ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் கொடுத்து, வலி நிவாரணத்திற்கு உதவும்.
மேலும் படிக்க | பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்
சிறந்த கால் இயக்கவியல் ஏற்படுவதால், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் வயிற்றின் மேம்பட்ட இயக்கவியலுக்கு வழிவகுக்கும். கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் பொருத்தமான இயக்கத்தை ஏற்படுத்தும். தசைகள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றில் போதுமான வலிமை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கவும், வெறும் கால்களில் நடப்பது உதவும். கால் தசைகள் வலுவாவதால் முதுகின் கீழ் பகுதி உறுதியடைகிறது.
வெறுங்காலுடன் நடப்பதாலும் உடற்பயிற்சி செய்வதாலும் சில ஆபத்துகளும் உள்ளன. வீட்டிற்குள் வெறுங்காலுடன் நடப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது. ஆனால் நீங்கள் வெளியில் செல்லும்போது, ஆபத்தானதாக மாறலாம்.
உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை காலணிகளில் செலவழித்த பிறகு, வெறுங்காலுடன் நடக்கத் தொடங்கும் போது, நடந்து செல்லும் மேற்பரப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். நிலப்பரப்பில் இருந்து காயத்திற்கு ஆளாகலாம்.
மேலும் படிக்க | கை, கால்களில் தொடர்ந்து வலி ஏற்படுகிறதா? கொலஸ்ட்ரால் பிரச்சனையாக இருக்கலாம்
அதாவது கரடுமுரடான அல்லது ஈரமான மேற்பரப்புகள் அல்லது வெப்பநிலை, கண்ணாடி அல்லது தரையில் உள்ள மற்ற கூர்மையான பொருள்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படலாம்.
நீங்கள் வெறுங்காலுடன் நடக்கும்போது, குறிப்பாக வெளியில் நடக்கும்போது, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அல்லது தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ