பொதுவாக நம் உடலில் எடை அதிகரித்தவுடன், அதைக் குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். கொரோனா வைரஸ் மற்றும் லாக்டவுன் காரணமாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது, இதன் காரணமாக குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் முன்பை விட மிகக் குறைந்தன, இது அவர்களின் எடையில் நேரடி விளைவை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் உடல் பிட்டாக நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை நாட வேண்டும்.
இந்த நிலையில் உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் நாம் செல்லும்போது, பல நேரங்களில் ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது, அது போன்ற நேரங்களில் பால், தயிர் போன்ற டைரி பொருட்களை சாப்பிடலாமா, ஆம் என்றால் எவ்வளவு அளவில் சாப்பிட வேண்டும் என்பதுதான். பால் புரதத்தின் வளமான ஆதாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதில் கொழுப்பும் உள்ளது, எனவே எடையை அதிகரிக்க அது முடியுமா? இதுபற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்
தயிர் சிறந்த செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ள உணவாகும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது, மேலும் இது வயிற்றை குளிர்ச்சியாகவும், எடை குறைக்கவும் உதவுகிறது. எனவே, எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் பாலுக்குப் பதிலாக தயிருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஒரு நபர் உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு, உடற்பயிற்சியும் செய்தால், அவர் அடிக்கடி பால் மற்றும் பழங்களை உட்கொள்வார், ஆனால் பால் மற்றும் பழங்களை ஒன்றாக கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இரண்டும் வலுவான விளைவைக் கொண்டுள்ளன. அதுவே தயிருடன் இந்துப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், பச்சைக் காய்கறிகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் அதனுடன் தயிர் சேர்த்துக் கொண்டால், குடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், எடையும் விரைவில் குறையும்.
தயிரில் நமது செரிமான அமைப்புக்கு மிகவும் முக்கியமான புரோபயாடிக்குகள் உள்ளன, அவை ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பொருட்களில் இல்லை என்பதல்ல, ஆனால் தயிர் மிகவும் மலிவான மற்றும் வீட்டு விருப்பமாகும்.
உடல் எடையை குறைக்கும் நேரத்தில், நீங்கள் பல வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள், இதற்கு வலுவான எலும்புகள் இருப்பது முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், பால் மூலம் பெறக்கூடிய கால்சியம் அதிக அளவு தேவைப்படுகிறது, இந்த தயிரில் சற்று குறைவாகவே காணப்படுகிறது என்று நிபுணர் தெரிவித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR