கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க

Cholesterol Lowering Habits: உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த எளிய டிப்ஸ் உங்களுக்கு உதவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 12:46 PM IST
  • இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க கூடாது.
  • கொலஸ்ட்ராலை குறைக்கும் பழக்க வழக்கங்கள்.
  • கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்தப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க title=

கொலஸ்ட்ராலை குறைக்கும் பழக்க வழக்கங்கள்: உடலில் கொழுப்பின் அளவு, அதாவது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதே பெரிய ஆபத்தின் ஆரம்பமாக கருதப்படுகின்றது. இதன் காரணமாக, முதலில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. பின்னர் மாரடைப்பு, கரோனரி தமனி நோய், மூன்று நாள நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால், நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் உடனடியாக மாற்றங்களைச் செய்வது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில் நமது உடலில் ஏற்படும் இழப்புகளுக்கு நாமே பொறுப்பாவோம்.

இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க கூடாது

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் நன்கு அறியப்பட்ட உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், நம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் இருந்தால், மற்ற கொடிய நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஏனெனில் கொலஸ்ட்ரால் காரணமாக உடல் பருமன் வந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் அதுவே காரணமாகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற 5 டயட் உணவுகள் 

கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்தப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்

1. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கான உங்கள் முயற்சியில் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் 2 முதல் 3 பூண்டு பற்களை மென்று சாப்பிடுங்கள்.

2. பால், சர்க்கரை மற்றும் தேயிலை அடங்கிய டீ குடிப்பீர்களானால், இப்பழக்கத்தை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, கிரீன் டீ குடிப்பது லாபகரமானதாக இருக்கும். 

3. கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைக்க தினமும் மஞ்சள் பால் குடிப்பதைப் பழக்கப்படுத்துங்கள். இரவில் அதன் நுகர்வு நன்மை பயக்கும்.

4. ஆளிவிதைகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விதைகளில் லினோலெனிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.

5. உங்கள் அன்றாட வாழ்வில் பச்சைக் காய்கறிகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவற்றை சமைக்கும் போது, குறைந்த அளவு சமையல் எண்ணெயையே பயன்படுத்துங்கள்.

இந்த பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க, நீங்கள் அன்றாட வாழ்க்கையின் சில பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இதற்கான நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகும். 

- புகைபிடிக்கும் பழக்கத்தை இன்றே விடுங்கள்

- ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க வேண்டாம்

- நிறைவுற்ற கொழுப்பு உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம்

- எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்

- சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்

- உடற்பயிற்சி / வாக்கிங் செய்யுங்கள்

- குறைந்த கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்ணுங்கள்
 
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Filter Water VS HotWater எந்த தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News