Actress Kasthuri Condition Bail Latest News Updates: சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கடந்த நவம்பர் 3ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டன. எழும்பூர் காவல் நிலையத்தில், நடிகை கஸ்தூரி மீது இரு குழுக்களை மோதிக்கொள்ள தூண்டும் வகையில் பேசுதல், சாதி, இனமொழி தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல், வதந்தி பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஹைதராபாத்தில் கைது
இதற்கிடையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது வீடு பூட்டியிருந்ததாகவும், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தமிழக ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல்
தொடர்ந்து, நடிகை கஸ்தூரியின் வீட்டு பணியாளர்களிடம் தனித்தனியாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஹைதராபாத்திற்கு அருகே இருப்பது தெரியவந்தது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி கடந்த நவ. 16ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு, சாலை வழியாக நவ. 17ஆம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
புழல் சிறையும், ஜாமீன் மனுவும்
அன்றே அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. புழல் மகளிர் சிறையில் கஸ்தூரிக்கு விசாரணை கைதி எண்: PID 644798 வழங்கபட்டது. கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கஸ்தூரியின் வழக்கறிஞர் தெரிவித்தார். சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இருந்தபோது கஸ்தூரியை கைது செய்ததாகவும் வழக்கறிஞர் பிரபாகரன் சாடினார். முறையாக வழக்கு விசாரணை தொடர்பாக அழைக்கப்படாமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
நிபந்தனை ஜாமீன்
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நேற்று முன்தினம் (நவ. 18) அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கஸ்தூரியின் குழந்தையின் நிலைமையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படாது எனவும் தகவல் வெளியானது. இந்த மனு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Crime | அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ