நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் இந்த பச்சை சாறு: கொத்து கொத்தாய் நன்மைகள்

Coriander: கொத்தமல்லி ருசியையும், தோற்றத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2022, 07:48 PM IST
  • பச்சை கொத்தமல்லி மிகவும் பயனுள்ளது.
  • இது சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
  • கொத்தமல்லி தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் இந்த பச்சை சாறு: கொத்து கொத்தாய் நன்மைகள்  title=

பச்சை கொத்தமல்லி நமது உணவில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருளாகும். சாம்பார், ரசம் என பல வித உணவுகளில் இதை வாசனைக்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்துகிறோம்.

இதைத் தவிர, இதன் சட்னியும் மிகவும் சுவையாக இருக்கும். தினசரி உணவில் கொத்தமல்லி இலையையும் தனியாவையும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கொத்தமல்லி உணவின் ருசியையும், தோற்றத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது. அதிசயிக்க வைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளன.

கொத்தமல்லியில் இந்த சத்துக்கள் உள்ளன

கொத்தமல்லி அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருளாகும். நீரிழிவு போன்ற நோய்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக உள்ளது. கொத்தமல்லி சாறில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் நோய்களையும் எதிர்த்து போராடும் ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றது. கொத்தமல்லி சாற்றை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அது குறித்த சிறப்பு தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | கை நடுக்கம் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம்; நடுக்கம் தீர சில எளிய பயிற்சிகள்! 

கொத்தமல்லி நன்மைகள்: கொத்தமல்லி நீரிழிவு நோய்க்கு நல்லது

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி அதிக நன்மைகளை அளிக்கின்றது. இதன் தண்ணீரை குடிப்பதால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படும். கொத்தமல்லி இலைகள் அல்லது விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை குடிக்கவும். 

கொத்தமல்லி நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கொத்தமல்லியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி-யை அதிகரிக்கிறது. இதில் எத்தனால் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது சீரம் குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கொத்தமல்லி நன்மைகள்: எடையை குறைக்க உதவும்

சர்க்கரை காரணமாக உங்கள் எடை அதிகரித்திருந்தால், கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிக நன்மைகளைப் பெறலாம். இதற்கு, மூன்று தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக குறைந்த பின்னர், வடிகட்டி, குடித்தால் உடல் எடை குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | திருமணத்துக்கு தயாராகும் பெண்களுக்கான 3 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News