ஊறவைத்த முந்திரியில் உள்ளன உடலுக்கான எக்கச்சக்க நன்மைகள்

Cashew: ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 5, 2022, 07:01 PM IST
  • பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்.
ஊறவைத்த முந்திரியில் உள்ளன உடலுக்கான எக்கச்சக்க நன்மைகள் title=

முந்திரி பலன்கள்: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முந்திரி அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். முந்திரியை அப்படியே சாப்பிடலாம், ஊறவைத்தும் சாப்பிடலாம். 

ஊறவைத்த முந்திரி எளிதில் ஜீரணமாகும். இதனால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால்தான் ஊறவைத்த முந்திரியை எப்போதும் சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. முந்திரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. இதனுடன், ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவது மேலும் பல நன்மைகளை அளிக்கிறது. ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது:

முந்திரியில் ஃபைடிக் அமிலம் காணப்படுகிறது. இது அனைவருக்கும் ஜீரணிக்க எளிதான ஒன்றாகும். முந்திரியை ஊறவைத்த பிறகு உட்கொள்ளும் போது, ​​அதிலிருந்து பைடிக் அமிலம் வெளியேறி, அது எளிதில் ஜீரணமாகும். பைடிக் அமிலம் சில சமயங்களில் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், இந்த பிரச்சனைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவது நல்லது. 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் இந்த பானத்தை தினமும் குடிக்கவும் 

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவுகிறது:

முந்திரியில் பைடிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பொதுவாக அனைவரது உடலிலும் சில தாதுக்களின் குறைபாடு இருக்கலாம். முந்திரியை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இந்தக் குறைபாடுகளைப் போக்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது:

ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் கிடைக்கும் ஹார்மோன்-உதவி பசியைக் கட்டுப்படுத்தும், ஆகையால் தேவையற்ற உணவை சாப்பிடாமல் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஊறவைத்த பீன்களில் கலோரிகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, பசியைக் குறைக்கும். அதே நேரத்தில், நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சரிசெய்கிறது. மேலும் எடை இழப்புக்கும் இது  உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்:

முந்திரி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் இது உங்களுக்கு உதவுகிறது. ஊறவைத்த முந்திரியை உண்ணும்போது, ​​கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. 

முந்திரி பருப்பு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது தவிர, முந்திரியில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனுடன் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | Migraine: ஒற்றைத்தலைவலிக்கான காரணங்கள், அறிகுறிகள் இவைதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News