விராட் கோலி முதல் அக்சர் படேல் வரை! ஐபிஎல் 2025ல் 10 அணிகளின் கேப்டன்கள்!

Virat Kohli: ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2025, 01:21 PM IST
  • விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன்?
  • பேட் கம்மின்ஸ் சன் ரைஸஸ் அணியில் தொடர உள்ளார்.
  • 10 அணிகளின் கேப்டன் பெயர்கள்.
விராட் கோலி முதல் அக்சர் படேல் வரை! ஐபிஎல் 2025ல் 10 அணிகளின் கேப்டன்கள்! title=

ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதால் இந்த ஆண்டு முதல் போட்டியும், பைனலும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் சில புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் நிறைய அணிகளில் கேப்டன்கள் மாற உள்ளனர். சென்னை மற்றும் மும்பை போன்ற அணிகளில் மாற்றம் இருக்காது என்றாலும் கொல்கத்தா, டெல்லி, லக்னோ போன்ற அணிகளில் புதிய கேப்டன்கள் பொறுப்பு ஏற்க உள்ளனர். ஒவ்வொரு அணியிலும் யார் யார் கேப்டன்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேலும் படிக்க | கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என பயந்தேன்.. ஆனா - மனம் திறந்த முகமது ஷமி!

பஞ்சாப் கிங்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர்

வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்க உள்ளார். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.

மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2024ல் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் டி20 உலக கோப்பை கோப்பையில் சிறப்பாக விளையாடினார். தற்போது இந்திய அணிக்கு சூர்யாகுமார் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதனால் மும்பை அணிக்கும் சூர்யா கேப்டனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஹர்திக் கேப்டனாக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாட் கம்மின்ஸ் - சன்ரைசஸ் ஹைதராபாத்

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், கடந்த ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். சிறப்பாக செயல்பட்ட இவர் அணியை பைனல் வரை கொண்டு சென்றார். ஐபிஎல் 2025ல் தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் சிறப்பாக விளையாடினாலும் பிளே ஆப்க்கு செல்ல தவறியது. ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக இருப்பார் ருதுராஜ்.

குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மான் கில் கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த ஆண்டும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளார். இந்திய அணிக்கு துணை கேப்டனாகவும் உள்ளார் கில்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரிஷப் பந்த்

டெல்லி அணியின் கேப்டனாக இருந்த பந்த் 27 கோடிக்கு லக்னோ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ள பந்த் லக்னோ அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ்

கேரளாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் கேப்டன்சி பிளேயரை எடுக்க தவறியது. மேலும் புதிய கேப்டனை இன்னும் அறிவிக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ரஹானேவும் இந்த லிஸ்டில் இருக்கிறார். இருவரில் ஒருவருக்கும் கேப்டன்சி வழங்கப்படலாம்.

ஆர்சிபி - விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தனது கேப்டனை இன்னும் அறிவிக்கவில்லை. கேப்டன்சி திறமை கொண்ட வீரரும் ஆர்சிபியில் இல்லை என்பதால் ஐபிஎல் 2025ல் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் - அக்சர் படேல்

இந்தியாவின் முக்கிய ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் ஐபிஎல் 2025ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார் என்று கூறப்படுகிறது. கேஎல் ராகுல் டெல்லி அணியில் இருந்தாலும் அக்சர் படேலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறேன் - டிவில்லியர்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News