8th Pay Commission: மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. தற்போது அறிவிக்கபட்டுள்ள 8வது ஊதியக் குழுவின் காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
8th Pay Commission: சம்பள உயர்வுகளைக் கணக்கிட 7வது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பயன்படுத்தியது. 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்த பின்னர், ஊதியத்தில் நல்ல உயர்வு ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக, ரூ.10,000 அடிப்படை ஊதியம் ரூ.25,700 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,50,000 ஆகவும் உள்ளன. நிபுணர் கணிப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என தெரிகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.41,040 முதல் ரூ.51,480 வரை அதிகரிக்கக்கூடும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. தற்போது அறிவிக்கபட்டுள்ள 8வது ஊதியக் குழுவின் காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, தங்கள் ஊதியக் கட்டமைப்பில் மாற்றங்களை எதிர்பார்க்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 2026 இல் முடிவடையும். 8வது ஊதியக் குழு அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு ஊதியக் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, இறுதியாக செயல்படுத்தப்படும். இந்த செயல்முறைக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகலாம், இது 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2028 இல் நடைமுறைக்கு வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது. எனினும், இதன் பணிகள் துரிதப்படுத்தபடும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஊதியக் குழு என்பது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கட்டமைப்பை திருத்தி, அதில் மாற்றங்களை பரிந்துரைக்க மத்திய அரசால் உருவாக்கப்படும் ஒரு குழுவாகும்.
முதல் ஊதியக் குழு ஜூலை 1946 இல் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜூலை 1947 இல் நடைமுறைக்கு வந்தன. தற்போது நடைமுறையில் உள்ள 7வது ஊதியக் குழு, 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஜூன் 2016 இல் செயல்படுத்தப்பட்டன.
சம்பள உயர்வுகளைக் கணக்கிட 7வது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பயன்படுத்தியது. 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்த பின்னர், ஊதியத்தில் நல்ல உயர்வு ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக, ரூ.10,000 அடிப்படை ஊதியம் ரூ.25,700 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,50,000 ஆகவும் உள்ளன.
நிபுணர் கணிப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என தெரிகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.41,040 முதல் ரூ.51,480 வரை அதிகரிக்கக்கூடும்.
பல்வேறு அடிப்படை ஊதிய நிலைகளுக்கான சாத்தியமான சம்பள உயர்வுகள் பற்றி இங்கே காணலாம். ரூ21,700 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.55,769.
ரூ.35,400 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.90,978. ரூ.53,100 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.1,36,467.
ரூ.78,800 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.2,02,516. ரூ.1,31,100 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.3,36,927.
ரூ.2,50,000 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.6,42,500.
மேலே உள்ளவை ஊடக அறிக்கைகளின் அடிப்படையிலான கணிப்புகள்தான். சரியான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் சம்பள திருத்தங்கள் அரசாங்கத்தின் இறுதி முடிவைப் பொறுத்தது. எப்படியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ரர்கள் கணிசமான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வை (Pension Hike) எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.