Maharashtra Jalgaon Train Accident: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் - பரந்தா ரயில் நிலையம் அருகே இன்று கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவி உள்ளது. இதனால், புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுந்து ரயிலை நிறுத்தி, பயணிகள் அதில் இருந்து அவசர அவசரமாக குதித்துள்ளனர்.
#WATCH | Pushpak Express accident | Mumbai: CPRO Central Railway, Swapnil Nila says, "Near Pachora in Jalgaon Pushpak Express which was coming from Lucknow towards Chhatrapati Shivaji Maharaj Terminus, an incident of alarm chain pulling occurred. After this incident, a few… pic.twitter.com/M1aafb3DQ3
— ANI (@ANI) January 22, 2025
துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு தண்டவாளத்தில் எதிர்புறத்தில் சென்றுகொண்டிருந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி பல பயணிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட தகவல்
இந்த ரயில் விபத்து குறித்து பேசிய மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா, "லக்னோவில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ஜல்கான் மாவட்டம் பச்சோரா அருகே, அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர்.
மேலும் படிக்க | Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கான இந்த 7 தேவைகள் - நிறைவேற்றுமா பட்ஜெட்?
அதே நேரத்தில், எதிர் திசையில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, சில பயணிகள் அந்த ரயிலில் மோதியதாக எங்களுக்குத் தெரியவந்தது. முதற்கட்ட தகவல்களின்படி 7-8 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களைக் கவனித்துக் கொள்ள உள்ளூர் நிர்வாகத்தின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம். அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் உதவி கோரியுள்ளோம்.
ரயில்வேயின் விபத்து நிவாரண மருத்துவ வேனும் பூசாவலில் இருந்து புறப்பட்டு, விரைவில் சம்பவ இடத்தை அடையும். கர்நாடக எக்ஸ்பிரஸ் அதன் பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளது, காயமடைந்த பயணிகளுக்கு உதவி வழங்கப்பட்ட பிறகு புஷ்பக் எக்ஸ்பிரஸ் பயணத்தை மீண்டும் தொடங்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் இரங்கல்
இந்த ரயில் விபத்து குறித்து பதிவிட்டுள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்,""ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா அருகே மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பயணிகளின் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன்.
அமைச்சர் கிரிஷ் மகாஜன் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றடைந்தனர். சற்று நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு சென்றடைவார். மேலும் மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என்றார். அதிகாரிகள் யாரும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், சம்பவ இடத்தில் 8 பேர் உயிரிழந்துவிட்டதாக நமக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அது அறிவிக்கப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ