'நாளை முக்கிய அறிவிப்பு' - X பதிவில் முதல்வர் ஸ்டாலின் - என்னவாக இருக்கும்?

MK Stalin News: நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்றும் வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2025, 06:09 PM IST
  • நாளை கீழடி தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  • இதில் இரும்பின் தொன்மை என்ற புத்தகத்தை முதல்வர் வெளியிடுகிறார்.
  • இந்நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது.
'நாளை முக்கிய அறிவிப்பு' - X பதிவில் முதல்வர் ஸ்டாலின் - என்னவாக இருக்கும்? title=

MK Stalin News: நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்றும் வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் நாளை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை குறிப்பிட்டே முதலமைச்சர் ஸ்டாலின், 'நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது' என பதிவிட்டுள்ளார். இதனால், கீழடி மற்றும் இந்திய துணைக் கண்டம் வரலாறு குறித்து வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  

நாளை என்ன நிகழ்ச்சி?

தங்கம் தென்னரசு அவரது பதிவில்,"இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு நாளை (ஜன. 23) காலை 10 மணியளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது" என குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கே வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும் படிக்க | ரத்தாகும் டங்ஸ்டன்? நாளை (ஜன.23) 'குட் நியூஸ்' வரும் - அண்ணாமலை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் மாற்றமா?

இதனால், நாளை முதலமைச்சர் எது குறித்து அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கலைஞர் மகளிர் உதவித்தொகையில் இதுவரை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக நீண்ட நாளாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஒருவேளை அது குறித்து அறிவிப்பு வெளியாகுமோ என சில பேர் கருதுகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு மிக குறைவுதான்.

கீழடி குறித்த அறிவிப்பா?

கீழடி தொடர்பான நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிக்க மாட்டார் என்பது ஒருபுறம் என்றாலும், முதலமைச்சர் கீழடி தொடர்பாகவே நாளை அறிவிப்பை வெளியிட உள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதாவது, கிமு 1500–200 காலகட்டம்தான் இந்தியாவின் இரும்பின் காலம் என கூறப்படுகிறது. ஒருவேளை, இந்த காலகட்டத்திற்கு முன்னரே கீழடியில் இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான பழமையான சான்றுகள் கிடைத்திருக்கலாம். இதனைதான் முதல்வர் ஸ்டாலின் நாளை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News