கடந்த சில தினங்களாக இலங்கையில் புத்த மத பிரிவினருக்கும், சிறுபான்மை இன மக்களான இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடம் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் கண்டி மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தினார்.
இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் கலவரக்காரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருக்க நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சுமார் 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டார்.
உலக மக்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்த இக்கலவரம் தற்போது ஓரளவிற்கு நிரைவடைந்துள்ள நிலையில், இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவித்து, நாட்டின் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டது என அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.