புதிய தேசிய கல்வி கொள்கை, இந்திய மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'உயர் கல்வியை மேம்படுத்துவதில் NEP-2020 இன் பங்கு' என்ற தலைப்பில் மாநாடு நடத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தேசிய கல்வி கொள்கை தொடர்பான ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) காலை 10:30 மணிக்கு வீடியோ காண்பரென்சிங் மூலம் உரையாற்ற உள்ளனர்.
"உயர்கல்வியை மாற்றுவதில் NEP-2020 இன் பங்கு" என்ற தலைப்பில் மாநாட்டை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
NEP-2020 என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும். இது, 34 ஆண்டுகள் கழித்து, 1986 ஆம் ஆண்டின் முந்தைய கல்வி தொடர்பான தேசிய கொள்கைக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. NEP-2020 பள்ளி மற்றும் உயர் கல்வி மட்டத்தில் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கை இந்தியாவை துடிப்பான அறிவாற்றல் மிக்க சமூகமாக மாற்ற முயற்சிக்கிறது. இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்றுவதற்கு நேரடியாக பங்களிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இந்த கல்விக் கொள்கை, இந்தியாவை மையமாகக் கொண்ட கல்வி முறையாக கருதப்படுகிறது.
கல்வி அமைச்சகமும் பல்கலைக்கழக மானியகுழுவும், முன்னதாக “தேசிய கல்விக் கொள்கை -2020 இன் கீழ் உயர்கல்வியில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் பற்றிய ஒரு மாநாட்டை” ஏற்பாடு செய்தன. அதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
நாளை நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் படிக்க | குடும்பத்தின் மீதான மோகத்தை விட வேண்டும்: சோனியா காந்திக்கு மற்றொரு கடித ‘குண்டு’