SSY, SCSS, NSC.. ஜாக்பாட் செய்தி!! சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் ஏற்றம்

Small Saving Schemes Interest Rate: முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, அரசாங்கம் பிபிஎஃப், என்எஸ்சி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 2024 ஜனவரி-மார்ச் மாதங்களில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2023, 08:52 AM IST
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள்: 7.7 சதவீதம்
  • கிசான் விகாஸ் பத்ரா: 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)
  • பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம்
SSY, SCSS, NSC.. ஜாக்பாட் செய்தி!! சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் ஏற்றம் title=

Small Saving Schemes Interest Rate: இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய விகிதத்திலேயே தொடர்ந்தது. எனினும், முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, அரசாங்கம் பிபிஎஃப், என்எஸ்சி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 2024 ஜனவரி-மார்ச் மாதங்களில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில், அதாவது டிசம்பர் 29 ஆம் தேதி வரக்கூடும் என கூறப்படுகின்றது. ஜி-செக் ஈல்டின் போக்கை பார்த்தால், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்று தோன்றுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 

“பிபிஎஃப், என்எஸ்சி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இப்போது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை 10 ஆண்டு ஜி-செக் ஈல்டுடன் இணைந்து நகர்கின்றன. ஆகையால் இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது” என்று இந்தியா ரேடிங் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரி கூறியுள்ளார். 

சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை முடிவு செய்வதற்கு முன், நாட்டின் பணப்புழக்க நிலை மற்றும் பணவீக்கத்தையும் அரசாங்கம் கண்காணிக்கிறது என்று மூத்த வங்கியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

PPF, NSC மற்றும் KVP உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. தற்போது சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நான்கு சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) மற்றும் 8.2 சதவீதத்துக்கு (மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்) இடையில் உள்ளன. 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்:

நடப்பு காலாண்டு ஜனவரி-மார்ச் 2024க்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

சேமிப்பு வைப்பு (Savings Deposit): 4 சதவீதம்

1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்

2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்

3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்

5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம்

5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை: 6.7 சதவீதம் (முன்பு 6.5 சதவீதம் முன்பு)

மேலும் படிக்க | Bharat Brand: 25 ரூபாய்க்கு அருமையான பாரத் பிராண்ட் அரிசி! அரசின் புத்தாண்டு பரிசு

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (National Saving Certificates - NSC): 7.7 சதவீதம்

கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra): 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund): 7.1 சதவீதம்

சுகன்யா சம்ரித்தி கணக்கு (Sukanya Samriddhi Account): 8.0 சதவீதம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme): 8.2 சதவீதம்

மாத வருமானக் கணக்கு (Monthly Income Account): 7.4 சதவீதம்.

சிறு சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பு வைப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன.

சேமிப்பு வைப்புகளில் 1-3 வருட கால வைப்பு மற்றும் 5 வருட தொடர் வைப்புகளும் அடங்கும். தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் இதில் அடங்கும். சமூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும். மாதாந்திர வருமானத் திட்டத்தில் மாதாந்திர வருமானக் கணக்கு உள்ளது.

நடப்பு அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில், பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் தபால் அலுவலக நேர வைப்புத் தொகைகள் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அக்டோபர்-டிசம்பர் 2023 வரை அரசு மாற்றாமல் வைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கான ரெக்கரிங் டெபாசிட்களுக்கு மட்டும் வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.7 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் பணம் போடவும் எடுக்கவும் இதுதான் வரம்பு: மீறினால் நோட்டீஸ் வரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News