SBI Card Festive Offer: நம்ப முடியாத சலுகைகள், கேஷ்பேக், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே

SBI Card Festive Offer: இந்த சலுகைகள் அனைத்து வகையான பிரபலமான வகைகளிலும் கிடைக்கும். சலுகைகள் கிடைக்கும் பொருட்களில் நுகர்வோர் பொருட்கள், மொபைல்கள், மடிக்கணினிகள், ஃபேஷன், மரச்சாமான்கள், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை அடங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 21, 2023, 06:56 PM IST
  • எஸ்பிஐ கார்டு பண்டிகை சலுகை.
  • இந்த சலுகை நவம்பர் 15ம் தேதி வரை உள்ளது.
  • இந்த பிராண்டுகளுக்கு EMI சலுகை கிடைக்கும்.
SBI Card Festive Offer: நம்ப முடியாத சலுகைகள், கேஷ்பேக், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே title=

SBI Card Festive Offer: எஸ்பிஐ கார்டு பண்டிகை சலுகையை (Festive Offer 2023) அறிவித்துள்ளது. கிரெடிட் கார்டு நிறுவனம் இது குறித்து பங்குச் சந்தைக்கு தகவல் அளித்துள்ளது. டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் உள்ள சுமார் 2200 வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பெறுவார்கள் என்று எஸ்பிஐ கார்டு தெரிவித்துள்ளது. இதன் கீழ், கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் அனைத்து வகையான பிரபலமான வகைகளிலும் கிடைக்கும். சலுகைகள் கிடைக்கும் பொருட்களில் நுகர்வோர் பொருட்கள், மொபைல்கள், மடிக்கணினிகள், ஃபேஷன், மரச்சாமான்கள், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்களுக்கு அதிக விலை பொருட்களை எளிதாக வழங்கும் வகையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், இஎம்ஐ சலுகைகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சலுகை நவம்பர் 15ம் தேதி வரை உள்ளது

எஸ்பிஐ கார்டின் (SBI Card) பண்டிகை ஆஃபர்கள் 2023ன் கீழ், 600க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான சலுகைகள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் ஹைப்பர்லோகல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை 15 நவம்பர் 2023 வரை செல்லுபடியாகும். இந்த பண்டிகை சலுகையின் கீழ், எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் 2700க்கும் மேற்பட்ட நகரங்களில் கேஷ்பேக் மற்றும் 27.5 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி போன்ற சலுகைகளைப் பெறுவார்கள். இந்த சலுகை Flipkart, Amazon, Myntra, Reliance Retail, Westside, Pantaloons, Max, Tanishq மற்றும் TBG போன்ற பிராண்டுகளிலும் கிடைக்கும்.

மேலும் படிக்க | SCSS vs Bank FD: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை அளிக்கும் சிறந்த திட்டம் எது?

இந்த பிராண்டுகளுக்கு EMI சலுகை கிடைக்கும்

SBI கார்டு EMI சலுகைகள் நுகர்வோர் பொருட்கள், மொபைல்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற பிரிவுகளில் பல்வேறு பிராண்டுகளின் கீழ் கிடைக்கும். இந்த பிராண்டுகளில் Samsung, LG, Sony, Oppo, Vivo, Panasonic, Whirlpool, Bosch, IFB, HP மற்றும் Dell போன்ற பிராண்டுகளும் அடங்கும்.

நிறுவனத்தின் எம்டி கூறியது என்ன? 

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் முயற்சித்துள்ளதாக நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ அபிஜீத் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அவர்களுக்கு இன்னும் அதிக பலனளிக்க வேண்டும் என நிறுவனம் விரும்புபதாக அவர் கூறினார். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைப்பதோடு, அவர்களின் பணமும் மிச்சமாகும்.

கூடுதல் தகவல்

SBI Festive Season Car Loan

கார் வனக்கும் எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சிறப்பான பரிசை வழங்கியுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் காலத்தில் (SBI Festive Season) சலுகையைக் கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் கார் கடன் வாங்குபவர்கள் இனி எந்த செயலாக்கக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இந்த சலுகை குறித்து எஸ்பிஐ ட்வீட் செய்தது

எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில், இந்த முறை வாடிக்கையாளர்கள் தங்கள் பண்டிகை காலத்தை இன்னும் அற்புதமாக மாற்றலாம் என்று எழுதியுள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ மூலம் தங்கள் கனவு காரை வாங்கி கொண்டாடலாம் என எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது. 

சலுகை ஜனவரி 31 வரை செல்லுபடியாகும்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) படி, திருவிழா சலுகையின் கீழ் வாங்க்கப்படும் கார் கடனில் வாடிக்கையாளர்களிடமிருந்து செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படாது. எஸ்பிஐ இணையதளத்தின்படி, இந்த சலுகை ஜனவரி 31, 2024 வரை செல்லுபடியாகும்.

மேலும் படிக்க | குறைந்த முதலீடு.. அதிக லாபம்: ஜாக்பாட் வருமானம் அளிக்கும் அசத்தலான தொழில் யோசனைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News