வருமான வரி சேமிப்பு டிபஸ்... இந்த அலவன்சுகளுக்கு வரி கிடையாது.. நோட் பண்ணுங்க மக்களே

Income Tax Saving Tips: பணியில் இருப்பவர்கள் தங்கள் பெறும் சம்பளத்திற்கான வருமான வரியைச் சேமிக்க, வரி விலக்கிற்கான முதலீடுகளை செய்வதுடன் கூடவே, புத்திசாலித்தனமாக சம்பளத்தை திட்டமிடுவது அவசியம். உங்கள் சம்பளத்துடன் நீங்கள் பெறும் கொடுப்பனவை சரியாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமாக வருமான வரியை சிறப்பாகச் சேமிக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2024, 01:52 PM IST
  • சம்பளத்தில் சில குறிப்பிட்ட கொடுப்பனவுகளை சேர்த்துக் கொண்டால், வருமான வரிக் கவலையை பெரிய அளவில் குறைக்கலாம்.
  • வரி விலக்கிற்கான முதலீடுகளை செய்வதுடன் கூடவே, புத்திசாலித்தனமாக சம்பளத்தை திட்டமிடுவது அவசியம்.
  • வரி விலக்கு முழுமையாக கிடைக்கும்சில குறிப்பிட்ட கொடுப்பனவுகள்.
வருமான வரி சேமிப்பு டிபஸ்... இந்த அலவன்சுகளுக்கு வரி கிடையாது.. நோட் பண்ணுங்க மக்களே title=

Income Tax Saving Tips: பணியில் இருப்பவர்கள் தங்கள் பெறும் சம்பளத்திற்கான வருமான வரியைச் சேமிக்க, வரி விலக்கிற்கான முதலீடுகளை செய்வதுடன் கூடவே, புத்திசாலித்தனமாக சம்பளத்தை திட்டமிடுவது அவசியம். உங்கள் சம்பளத்துடன் நீங்கள் பெறும் கொடுப்பனவை சரியாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமாக வருமான வரியை சிறப்பாகச் சேமிக்கலாம்.

நீங்கள் வேலையில் சேரும் போது, சம்பளத்தின் ஒவ்வொரு விவரத்தையும் கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள். சில கொடுப்பனவுகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு. அந்த வகை அலவன்சுகள் சேர்க்கப்படவில்லை என்றால், HR அதிகாரிகளுடன் உடன் பேசி, அவற்றை உங்கள் சம்பளத்தில் சேர்க்குமாறு கோருங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் வரியைச் சேமிக்க பெரிதும் உதவும்.

உங்கள் சம்பளத்தில் கீழ்கண்ட வகை அலவன்சு அதாவது கொடுப்பனவுகளை சேர்த்துக் கொண்டால், உங்கள் வருமான வரிக் கவலையை பெரிய அளவில் குறைக்கலாம். அத்தகைய சில கொடுப்பனவுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1. வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்குகின்றன. இது உங்கள் அடிப்படை சம்பளத்தில் 40-50% வரை இருக்கலாம் மற்றும் வரிச் சேமிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்த அலவன்சு உங்கள் சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என்றால், அதைச் சேர்க்க பரிந்துரைக்கலாம். 

2. போக்குவரத்து செலவுக்கான கொடுப்பனவு

சம்பளத்தில் வழங்கப்படும் போக்குவரத்து செலவுக்கான கொடுப்பனவு அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான பயணச் செலவுகளை உள்ளடக்கும். இது உங்கள் சம்பளத்தில் இல்லை என்றால், அதைச் சேர்த்துக்கொள்ளவும். இதன் மூலம் இந்த செலவில் வரியைச் (Tax Saving Tips) சேமிக்கலாம்.

3. வாகன பராமரிப்பு கொடுப்பனவு

நீங்கள் அலுவலகம் செல்ல உங்கள் வாகனத்தை அதிகம் பயன்படுத்தும் நிலையில், வாகன பராமரிப்பு கொடுப்பனவு உங்கள் இரு சக்கர வாகனம் அல்லது கார் பராமரிப்பு, அதற்கான எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவுகளுக்காக உங்களுக்கு வழங்குகிறது. இதற்கும் வரி கிடையாது.

மேலும் படிக்க | Mutual Funds: 30% வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்கள்... டாப் 5 நிதியங்கள் இவை தான்

4. மருத்துவ கொடுப்பனவு

பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவ செலவுகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குகின்றன. உங்கள் சம்பளத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் மருத்துவ கொடுப்பனவு வரியைச் சேமிக்க உதவுகிறது.

5. பயணப்படி விடுப்பு (LTA)

பயண செலுவுகளுக்கான உதவித்தொகையாக வழங்கப்படும் இந்த கொடுப்பனவின் கீழ் உங்கள் பயணச் செலவுகளை கம்பெனிகளின் விதிகளின் படி, நீங்கள் பயணத்திற்காக செலவழித்த தொகையை திரும்பப் பெறலாம்.

6. மொபைல் மற்றும் இணைய வசதிக்கான கொடுப்பனவு

அலுவலக வேலைகளில் மொபைல் மற்றும் இண்டெநெட் வசதி இன்றியமையாதது.. இந்த கொடுப்பனவின் கீழ், உங்கள் பில்களை சமர்பிக்கும் போது, அதற்கான வரி விலக்கு முழுமையாக கிடைக்கும்.

7. கல்வி மற்றும் விடுதி கொடுப்பனவு

உங்களுக்கு குழந்தைகளுக்கான கல்வி மற்றும் விடுதி செலவுகளுக்கு இந்த கொடுப்பனவை எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் வரிவிலக்கு உண்டு. 

8. உணவு வவுச்சர் அல்லது உணவு கொடுப்பனவு

பல நிறுவனங்கள் உணவு வவுச்சர்கள் அல்லது உணவு கொடுப்பனவுகளை வழங்குகின்றன, அதை நீங்கள் உணவுக்கான செலவுகளுக்கு பயன்படுத்தலாம். இந்த கொடுப்பனவுக்கு வரி விதிக்கப்படுவதில்லை

9. புத்தகங்கள் மற்றும் இதழ் கொடுப்பனவு

உங்கள் வேலையில் புத்தகங்கள், பத்திரிகைகள் அல்லது செய்தித்தாள்கள் படிப்பது அவசியம் என்ற நிலையில், அதன் கொடுப்பனவு உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்த கொடுப்பனவுக்கும் வரி இல்லை.

10. சீரான கொடுப்பனவு

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சீரான கொடுப்பனவை வழங்குகின்றன. உங்கள் நிறுவனமும் இந்த கொடுப்பனவை வழங்கினால், அதை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதற்கு வரி விதிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | Budget 2025: வருமான வரி விதிகளில் சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் அரசு, காத்திருக்கும் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News