டெல்லி: பாஸ்போர்ட் சேவை திட்டத்திற்கான டிஜி லாக்கர் தளத்தை (DigiLocker Platform) வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் இனி அசல் ஆவணங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. டிஜி லாக்கர் திட்டத்தின் மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இந்த புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் நாட்டில் பாஸ்போர்ட் சேவைகளை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மாற்றமாகும் என்று வெளிவிவகார துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் பாஸ்போர்ட் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பாஸ்போர்ட் (Passport) பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் முதல் முறையாக, ஒரு மாதத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
ALSO READ | WhatsApp Payment: ஆன்லைன் மோசடியை தவிர்க்க எச்சரிக்கை தேவை..!!!
பாஸ்போர்ட் விதிகளின் எளிமைப்படுத்தல்
பாஸ்போர்ட் (Passport) பெற விரும்புபவர்களின் வசதிக்காக, வெளியுறவு அமைச்சகம் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. ஒருபுறம் பாஸ்போர்ட் விதிகள் பெரிதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன; மறுபுறம், அவர்களது வீட்டுக்கு அருகிலும் பாஸ்போர்ட் மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவை மையங்கள் முக்கிய தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன. 426 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் (POPSK) செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் பல மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது, 366 பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் தற்போதுள்ள 93 பாஸ்போர்ட் சேவை மையங்களுடன் 426 தபால் அலுவலக (Post Office) பாஸ்போர்ட் சேவை மையங்களிலிருந்து, பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த வகையில், நாட்டில் மொத்தம் 555 இடங்களிலிருந்து பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இ-பாஸ்போர்ட் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன
கொரோனா (Corona Virus) காலத்தில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இ-பாஸ்போர்ட்களை வழங்கும் செயல்முறை தொடர்பான பணிகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இ-பாஸ்போர்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும். இது தவிர, இ-பாஸ்போர்ட் மூலம் தகவல்கள் மேலும் பாதுகாக்கப்பாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு சேவையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது, இதனால் மக்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து வசதிகளையும் பெறுகிறார்கள்.
ALSO READ | தற்சார்பு பாரதம்: கூகுள் மேப், கூகுள் எர்த் சேவைக்கு போட்டியாக ISRO-MapmyIndia
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR