EPFO Update: விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.... விவரம் இதோ

EPFO Rule Change: EPFO பிஎம் நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் 68J க்ளெய்மின் கீழ் தங்கள் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2024, 10:21 AM IST
  • இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.
  • விதிகளில் முக்கிய மாற்றம்.
  • முழு விவரங்களை இங்கே காணலாம்.
EPFO Update: விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.... விவரம் இதோ title=

EPFO Rule Change: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இபிஎஃப்ஓ விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

EPFO பிஎம் நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) 68J க்ளெய்மின் கீழ் தங்கள் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம். இதுவரை இந்த வரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. இந்த விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைத்துள்ளது. அவசர காலங்களில் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து போதுமான பணத்தை எடுக்க முடியாமல் தவித்த லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. இப்போது EPFO ​​உறுப்பினர்கள், மருத்துவ தேவைகளுக்காக தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவர்களின் சிகிச்சைக்கு தங்கள் PF கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம்.

இது குறித்து இபிஎஃப்ஓ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவ அவசர தேவை க்ளெய்முக்கான வரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது 10 ஏப்ரல் 2024 அன்று அப்ளிகேஷன் சாஃப்ட்வேரிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

முன்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

EPF உறுப்பினர்கள் இப்போது தங்கள் அல்லது தங்களைச் சார்ந்தவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக EPF திட்டத்தின் 68-J பத்தியின் கீழ் முன்பணத்திற்காக விண்ணப்பிக்கலாம். இபிஎஃப் உறுப்பினர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் இருந்தாலோ, அல்லது, மருத்துவமனையில் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாலோ, அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அன்வான்ஸ் தொகைக்க்கு விண்னப்ப்பிக்கலாம் என EPFO கூறுகிறது. 

மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!!

உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு தேவைகளுக்காக படிவம் 31 மூலம் பிஎம் நிதியிலிருந்து பணத்தை எடுக்கலாம். திருமணம், வீடு, நிலம் அல்லது மனை வாங்குதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல், மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற தேவைகள் இதில் அடங்கும். EPFO சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக எடுக்கப்படும் பணத்திற்கான வரம்பை அதிகரிப்பது தொடர்பான தகவல்களை வழங்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

பத்தி 68J என்றால் என்ன?

பத்தி 68J இன் (Paragraph 68J)கீழ், உறுப்பினர்கள் சில குறிப்பிட்ட்ட சந்தர்ப்பங்களில் நோய்களுக்கான சிகிச்சைக்காக பிஎஃப் நிதியிலிருந்து முன்பணம் கோரலாம். ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் இருந்தாலோ, அல்லது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டாலோ அல்லது காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கைளில் இந்த வசதி கிடைக்கும். பத்தி 68-J இன் கீழ் அட்வான்ஸ் கோர, எந்த உறுப்பினரும் இப்போது எந்த புரோஃபார்மா, மருத்துவச் சான்றிதழ் அல்லது வேறு எந்த வகையான சான்றிதழ் அல்லது ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வார இறுதி நாட்கள் இல்லாத வேலை நாட்களில் முன்பணத்திற்கு விண்ணப்பித்தால், அடுத்த நாளே உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். உறுப்பினர்கள் விரும்பினால், நேரடியாக மருத்துவமனை கணக்கிலும் பணத்தை மாற்றலாம்.

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News