Black Friday Sale 2022: பிளாக் ஃப்ரைடே சேலில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள்

Black Friday Sale 2022: கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும் பிளாக் ஃப்ரைடே சேல் இந்தியாவிலும் அமோகம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2022, 09:25 AM IST
  • ஆன்லைன் ஷாப்பிங் மேளா பிளாக் ஃப்ரைடே
  • அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடி
  • பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனை இந்தியாவில்
Black Friday Sale 2022: பிளாக் ஃப்ரைடே சேலில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் title=

Black Friday Sale 2022: ஆன்லைன் ஷாப்பிங் ட்ரெண்ட் அதிகமாகியிருக்கும் இந்த காலத்தில், அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடியும் கிடைக்கிறது. பாரம்பரியமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும் பிளாக் ஃப்ரைடே சேல் (Black Friday Sale) இந்தியாவிலும் அமோகமாக நடைபெறுகிறது. பல ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் பல்வேறு தயாரிப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் பிளாக் ப்ரைடே நாளான இன்று, அமேசான், பிளிப்கார்ட், விஜய் சேல்ஸ், குரோமா மற்றும் பிற நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன.  

பல இந்திய இ-காமர்ஸ் தளங்கள் 2022 கருப்பு வெள்ளி விற்பனையில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. இதில், Amazon India, Myntra, Croma, Tata Cliq என பல தளங்களும் சூப்பர் ஆஃபர்களை வழங்குகின்றன.

மேலும் படிக்க | Flipkart அதிரடி ஆஃபர்: வெறும் ரூ.9999 விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன்!   

சாம்சங் இந்தியா பிளாக் ஃப்ரைடே விற்பனை 2022

சாம்சங் இந்தியாவின் பிளாக் ஃப்ரைடே சேலில், ஸ்மார்ட்போன்கள், குளிர்சாதன பெட்டிகள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்பட்கள் மற்றும் பலவற்றில் நல்ல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை கிடைக்கிறது.

சாம்சங் பிரீமியம் ஸ்மார்ட்போன் - Galaxy S22 Ultra விற்பனையின் போது 17% தள்ளுபடி. இதன் விலை சுமார் ரூ.109999. இத்துடன், வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை வங்கி கேஷ்பேக் மற்றும் ஆப் வெல்கம் ஆஃபர்களைப் பெறலாம். இதேபோல், Galaxy Z Flip 4 ஆனது 8GB RAM மற்றும் 128 GB சேமிப்பகத்திற்கான பேங்க் கேஷ்பேக் மற்றும் ஆப் வெல்கம் உடன் ரூ.9000 தள்ளுபடி உட்பட ரூ.89999க்கு கிடைக்கிறது.
 
க்ரோமா பிளாக் ஃப்ரைடே 2022 
ICICI வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 10% வரை தள்ளுபடி பெறலாம். க்ரோமா ஸ்டோரில் பிளாக் ஃபிரைடே ஆஃபர், நவம்பர் 18 முதல் 27 வரை சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். குரோமா இணையதளத்தில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அவ்வப்போது அதிரடியாக வெளியிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகளின் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள, அவ்வப்போது இணையதளத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | UPI பாஸ்வேர்டை PAYTM வழியாக மாற்றுவது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்

டாடா கிளிக் பிளாக் ஃப்ரைடே விற்பனை
டாடா கிளிக் 50% வரை நல்ல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. பிளாக் ஃபிரைடே ஆஃபர், நடந்துக் கொண்டு இருக்கிறது. உடைகள், ஃபேஷன், ஸ்மார்ட்போன்கள், தளபாடங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்கலாம்.

அமேசான் இந்தியா பிளாக் ஃப்ரைடே விற்பனை 2022
அமேசான் இந்தியா நிறுவனம், இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனையை நடத்துகிறது. ஹெட்ஃபோன்கள், புளூடூத் ஸ்பீக்கர்கள், கேமரா பாகங்கள் மற்றும் வீட்டு பொழுதுபோக்கு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் அதிக அளவிலான தள்ளுபடிகளை வழங்குகிறது.  இந்த சலுகை விற்பனையில் ஆடை மற்றும் ஆடியோ கியர் மீது கவனம் செலுத்துகிறது.
 
அமர்சித்ரகதா காமிக்ஸில் பெரும் தள்ளுபடி 
பிளாக் ஃபிரைடே சேலில் அமர்சித்ரகதா காமிக்ஸில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இதில் நீங்கள் 80% வரை தள்ளுபடியைப் பெறலாம்.

மைந்த்ரா பிளாக் ஃபிரைடே விற்பனை 2022
நவம்பர் 26 முதல் 30 வரை பிளாக் ஃபிரைடே விற்பனையை மைந்த்ரா அறிவித்திருக்கிறது. இதில் 50-80% வரை தள்ளுபடி சலுகையைப் பெறலாம்

மேலும் படிக்க | வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் PPF கணக்கு தொடங்க முடியுமா? விதிகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News