ரூ.10, ரூ.100 நோட்டு.. ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்: செல்லுபடி ஆகுமா, ஆகாதா?

RBI on Rs.100, Rs.10 Note: பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2023, 03:27 PM IST
  • ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பற்றி ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
  • பழைய 100 ரூபாய் நோட்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.
  • ரிசர்வ் வங்கிக்கு 10 ரூபாய் நாணயம் தலைவலியாக மாறியுள்ளது.
ரூ.10, ரூ.100 நோட்டு.. ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்: செல்லுபடி ஆகுமா, ஆகாதா? title=

பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளது. இந்த பழைய நோட்டுகளின் வரிசையை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தில் ரிசர்வ் வங்கி செயல்படுவதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பற்றி ரிசர்வ் வங்கி கூறியது என்ன? இந்த பதிவில் விரிவாக காணலாம்.

பணமதிப்பிழப்பு

கள்ள நோட்டுகளின் அச்சுறுத்தலை தவிர்க்க ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய நோட்டுகள் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். மக்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் மொத்த நோட்டுகளின் மதிப்பு அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது அல்லது அதற்கு பதிலாக புதிய நோட்டுகள் அளிக்கப்படுகின்றன. 

பழைய 100 ரூபாய் நோட்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்

2 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி புதிய 100 நோட்டை வெளியிட்டது. புதிய ரூ.100 நோட்டு அடர் ஊதா நிறத்தில் உள்ளது. இதில் வரலாற்று தளமான ராணி கி வாவ்-க்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ராணி கி பாவ்டி என்றும் அழைக்கப்படுகிறது. ராணி கி வாவ் குஜராத்தின் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. யுனெஸ்கோ 2014 இல் ராணி கி வாவை உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்தது. யுனெஸ்கோ இணையதளத்தின்படி, ராணி கி வாவ் சரஸ்வதி நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், பழைய 100 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும், அது செல்லுபடியாகும் பணமாக கருதப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் பி மகேஷ் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு 10 ரூபாய் நாணயம் தலைவலியாக மாறியுள்ளது

10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) தலைவலியாக மாறியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் 10 ரூபாய் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டாலும், கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்து வருகின்றனர். அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனால் ரிசர்வ் வங்கியிடம் 10 ரூபாய் நாணயங்கள் மலைபோல் குவிந்து வருகின்றன. 

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பம்பர் ஊதிய உயர்வு! எவ்வளவு தெரியுமா?

இது குறித்து ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் பி.மகேஷ், “10 ரூபாய் நாணயத்தை புழக்கத்தில் இருந்து நீக்கும் திட்டம் இல்லை. இதில் போலி நாணயங்கள் பிரச்னை இல்லை என அனைத்து வங்கிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரூ.10 நாணயம் முன்பு போலவே சந்தையில் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய வங்கிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.

சில ரூபாய் நோட்டுகள் செல்லாது என அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஆர்பிஐ கூறியுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டும் நம்பினால் போதும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு ரூபாய் நோட்டு எந்த நிலைகளில் செல்லாததாக கருதப்படும் என்பதற்கு சில விளக்கங்களையும் ஆர்பிஐ வழங்கியுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை கண்டறிவது எப்படி? 

- நோட்டுகள் மிகவும் அழுக்காகி, அவற்றில் அதிக மண் படிந்து இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படுகின்றன.

- பல நேரங்களில், நோட்டுகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், நோட்டுகள் தளர்வாக மாறும். அத்தகைய நோட்டுகள் செல்லாது. 

- விளிம்பிலிருந்து மையம் வரை கிழிந்த நோட்டுகள் செல்லாது.

- 8 சதுர மில்லிமீட்டருக்கும் அதிகமான துளைகளைக் கொண்ட நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக கருதப்படுகின்றன.

- நோட்டில் ஏதேனும் கிராஃபிக் மாற்றம் இருந்தால் அவை செல்லாது.

- பேனாவின் மை நோட்டில் தெளிக்கப்பட்டிருநால் அது செல்லாது.

- நோட்டின் நிறம் மங்கினால், அது செல்லாது.

- நோட்டில் டேப், க்ளூ போன்ற விஷயங்கள் இருந்தால், அத்தகைய நோட்டு செல்லாத நோட்டாக கருதப்படும். 

- நோட்டின் நிறம் மாறி இருந்தால், அத்தகைய நோட்டுகளும் செல்லாததாக கருதப்படும். 

மேலும் படிக்க | Post Office அசத்தல் திட்டம்: வட்டியிலேயே பம்பர் லாபம், திட்ட முடிவில் அதிரடி வரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News