ATAL PENSION YOJANA , அதாவது அடல் பென்ஷன் திடத்தின் வரை 2.4 கோடிக்கும் அதிகமான சந்தாதார் இணைந்துள்ளனர். இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வீதிய திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வுவூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.
அடல் ஓய்வூதிய திட்டத்தில் இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். 2020-21 நிதியாண்டில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட அடல் ஓய்வூதிய திட்ட கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்த இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் திறக்க முடியும்.
இந்த திட்டத்தின் கீழ், இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .1000 முதல் ஐந்தாயிரம் வரை உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். சந்தாதாரரருக்கு மரணம் ஏற்பட்டால், அவரது / அவளது துணைக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். துணை இல்லை என்றால், அவர் நாமினேட் செய்த நபருக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.
2020-21 நிதியாண்டில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட APY கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 20, 2020 க்குள், அடல் ஓய்வூதிய திட்டத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.4 கோடியை தாண்டியுள்ளது.
ALSO READ | NEP 2020 என்பது தேசத்தின் கல்வி கொள்கை, அரசின் கல்விக் கொள்கை அல்ல: பிரதமர் மோடி
நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வகை பற்றி பேசுகையில், எஸ்பிஐ இதுவரை அதிக எண்ணிக்கையிலான அடல் ஓய்வூதிய கணக்குகளை திறந்துள்ளது. தனியார் துறையில் ஆக்சிஸ் வங்கி, ஆர்ஆர்பியில் ஆரியட்டல் பேமென்ட் வங்கி மற்றும் ஏர்டெல் பேமென்ட் வங்கி ஆகியவை பெரும்பாலான கணக்குகளைத் திறந்துள்ளன.
2020 ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை, திட்டத்தின் மொத்த சந்தாதாரர்களில், சுமார் 73.38 சதவீத சந்தாதாரர்கள் ரூ .1,000 ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், 16.93 சதவீதம் பேர் ரூ .5,000 ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்த சந்தாதாரர்களில், 43.52 சதவீதம் பெண் சந்தாதாரர்களும், 56.45 சதவீதம் ஆண் சந்தாதாரர்களும் உள்ளனர். அதே நேரத்தில், சந்தாதாரர்களில் 52.55 சதவீதம் பேர் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கிட்டதட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து தப்ப சில நேர்மறை சிந்தனைகள்..!!!