மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 50% டிஏ உறுதி, பிற அலவன்சுகளிலும் ஏற்றம்

7th Pay Commission: அகவிலைப்படி 50% ஐ எட்டியவுடன் சில மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். டிஏ 50% ஐ எட்டும்போது, 7வது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி, குறிப்பிட்ட அலவன்ஸ்கள் மற்றும் சம்பளக் கூறுகள் அதிகரிக்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2024, 01:42 PM IST
  • குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2024 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபப்டி 50% ஆக உயரும்.
  • அதாவது அகவிலைப்படியில் 4 சதவிகித ஏற்றம் இருக்கும்.
  • தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 46 சதவிகிதமாக உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 50% டிஏ உறுதி, பிற அலவன்சுகளிலும் ஏற்றம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு செய்தி வந்துள்ளது. அவர்களது நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு வெளியாகிவிட்டது. தொழிலாளர் பணியகம் டிசம்பர் 2023 க்கான தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கான கணிசமான அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. குறியீட்டில் சிறிய சரிவு காணப்பட்டாலும், ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டுவது உறுதியாக உள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டு எண் (AICPI Index) 3 புள்ளிகள் குறைந்து 138.8 ஆக உள்ளது. ஒரு மாத சதவீத மாற்றத்தில், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 0.22 சதவீதம் குறைந்துள்ளது. 

அகவிலைப்படி உயர்வு (DA Hike)

இந்த குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2024 முதல், மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைபப்டி 50% ஆக உயரும். அதாவது அகவிலைப்படியில் 4 சதவிகித ஏற்றம் இருக்கும். தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 46 சதவிகிதமாக உள்ளது. சமீப மாதங்களாக அதிகரித்து வரும் பணவீக்கத்தால் சிக்கித் தவிக்கும் அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு (DA Hike) வரவேற்கத்தக்கதாக இருக்கும். 

டிசம்பர் CPI-IW எண்ணிக்கை (December CPI-IW Figure)

தொழில்துறை தொழிலாளர்களுக்கான பணவீக்கத்தை அளவிடும் டிசம்பர் CPI-IW எண்ணிக்கை, 138.8க்கு வந்துள்ளது. இது முந்தைய மாத எண்ணிக்கையான 139.1ஐ விடக் குறைவு. உணவு மற்றும் பானங்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம் குறியீட்டில் இந்த குறைவுக்கு முதன்மையான உந்துதலாக இருந்துள்ளது. இதன் மூலம், ஜனவரி 2024 முதல் டிஏ (DA) கணக்கிடுவதற்குத் தேவையான அனைத்து குறியீடுகளும் இப்போது கிடைத்துவிட்டன.

மேலும் படிக்க | Budget 2024: தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?

டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆக உள்ள ஒரு ஊழியருக்கு கூடுதலாக டிஏ வடிவில் மாதம் ரூ. 9,000 கிடைக்கும். 

மேலும் ஒரு குட் நியூஸ்

இந்த முறை, அகவிலைப்படி உயர்வு மற்றொரு நன்மையுடன் வருகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி, அகவிலைப்படி 50% ஐத் தாண்டியதால், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) கூறுகளும் உயரும். எக்ஸ், ஒய் மற்றும் இசட் நகரங்களில் தற்போது அடிப்படை கொடுப்பனவுகள் 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளன. அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டியவுடன் HRA, 30%, 20% மற்றும் 10% ஆக மாற்றியமைக்கப்படும். எச்ஆர்ஏ திருத்தம் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியக் குழு பரிந்துரைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த அலவன்ஸைத் திருத்த தனி உத்தரவு தேவையில்லை.

மற்ற கொடுப்பனவுகளிலும் ஏற்றம்

அகவிலைப்படி 50% ஐ எட்டியவுடன் சில மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். டிஏ 50% ஐ எட்டும்போது, 7வது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி, குறிப்பிட்ட அலவன்ஸ்கள் மற்றும் சம்பளக் கூறுகள் அதிகரிக்கப்படும். அந்த அல்வன்சுகளின் விவரம் இதோ. 

- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)
- குழந்தைகள் கல்வி உதவித்தொகை (Children Education Allowance)
- குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை (Special Allowance for Child Care)
- விடுதி மானியம் (Hostel Subsidy)
- இடமாற்றத்திற்கான டிஏ (தனிப்பட்ட விளைவுகளின் போக்குவரத்து) (TA on Transfer )
- பணிக்கொடை உச்சவரம்பு (Gratuity Ceiling)
- ஆடை அலவன்ஸ் (Dress Allowance)
- சொந்த போக்குவரத்துக்கான மைலேஜ் கொடுப்பனவு (Mileage Allowance for Own Transport)
- தினசரி கொடுப்பனவு (Mileage Allowance for Own Transport)

மேலும் படிக்க | பட்ஜெட் தினத்தில் ஷாக் நியூஸ்! சிலிண்டர் விலை திடீரென உயர்வு.. விலை நிலவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News