அம்பேத்கர் குறித்து சர்ச்சை ட்விட்: பாண்டியாவின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை?

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டது ஹர்திக் பாண்டியாவின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை என செய்திகள் வந்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 23, 2018, 01:20 PM IST
அம்பேத்கர் குறித்து சர்ச்சை ட்விட்: பாண்டியாவின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை? title=

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ''எந்த அம்பேத்கர்? குறுக்குச் சட்டத்தை இயற்றியவர் மற்றும் அரசியல் அமைப்பு அல்லது நாட்டில் இட ஒதுக்கீடு எனப்படும் நோயை நாட்டில் பரப்பியவர்'' என அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்ததாக டி.ஆர் மெக்வால் என்பவர், ஜோத்பூர் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை கடந்த 20-ம் தேதி விசாரித்த ஜோத்பூர் சிறப்பு கோர்ட், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது FIR பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

சர்ச்சை கருத்தால் இந்திய கிரிக்கெட் வீரர் மீது FIR பதிவு!

அம்பேத்கரை விமர்சித்து வந்த ட்வீட் @sirhardik3777 என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ஆனால் ஹர்திக் பாண்டியாவின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கம் @hardikpandya7 ஆகும்.

இந்நிலையில், அம்பேத்கர் குறித்து ஹர்திக் பாண்டியா பதிவிட்டிருந்த கருத்து அவரது அதிகாரப் பூர்வமான ட்விட்டர் பக்கம் இல்லை என்றும், வேறு யாரோ 
செய்திருக்கிறார்கள், தவறுதலாக ஹர்திக் பாண்டியா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என சில ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டது ஹர்திக் பாண்டியாவின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கமா அல்லது வேறு நபருடையதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Trending News