Miss Universe 2023: இந்தியா சார்பில் பங்கேற்கும் திவிதா ராய், போட்டியை எப்படி காண்பது?

Miss Universe 2023: இந்த அழகுப் போட்டி அமெரிக்கா லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள எர்னஸ்ட் என் மோரியல் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 13, 2023, 02:37 PM IST
  • அமெரிக்கா லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவுள்ள அழகி போட்டி.
  • போட்டியை காண்பது எப்படி?
  • இந்தியா சார்பில் திவிதா ராய்.
Miss Universe 2023: இந்தியா சார்பில் பங்கேற்கும் திவிதா ராய், போட்டியை எப்படி காண்பது? title=

இந்த வார இறுதியில் நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவுள்ள 71வது பிரபஞ்ச அழகி போட்டியின் (மிஸ் யூனிவர்ஸ்) இறுதி கட்டத்திற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இதில் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிடும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பெண்களை கொண்டாடும் விதமாக 71வது ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஜனவரி 14, 2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 

இந்த அழகிப் போட்டி அமெரிக்கா லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள எர்னஸ்ட் என் மோரியல் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படும். இந்திய நேரப்படி, மிஸ் யுனிவர்ஸ் 2023 ஞாயிற்றுக்கிழமை காலை அதாவது ஜனவரி 15 காலை 6:30 மணிக்கு நடைபெறும். அதேபோல அமெரிக்கா நேரப்படி சனிக்கிழமை மாலை அதாவது ஜனவரி 14 இரவு 8 மணிக்கு அழகிப் போட்டி நடைபெறும்.

போட்டியை காண்பது எப்படி?

மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியை நியூ ஆர்லியன்ஸ், லூசியானாவில் உள்ள எர்னஸ்ட் என் மோரியல் கன்வென்ஷன் சென்டர் ஒளிபரப்பும். இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் VIACOM 18 நிறுவனத்துக்கு சொந்தமான Voot மூலம் நேரடியாக பார்க்கலாம் அல்லது JKN18 சேனலின் அதிகாரப்பூர்வ Facebook மற்றும் YouTube சேனல்களில் பார்க்கலாம். இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்கள், ரோகு சேனலின் இணையதளத்தில் இரவு 7 மணிக்கு ET அல்லது டெலிமுண்டோவில் அதே நேரத்தில் ஸ்பானிஷ் மொழியில் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | முன்னால் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோ!!

இந்தியா சார்பில் திவிதா ராய் 

மிஸ் யுனிவர்ஸ் யூடியூப் சேனல், ஜனவரி 18, 2023 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மிஸ் யுனிவர்ஸ் தேசிய ஆடை நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்யும். மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் (Miss Universe 2023) இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்கிறார். மிஸ் திவா அமைப்பின் 10-வது ஆண்டு விழாவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, ராய் மிஸ் திவா யுனிவர்ஸ் 2022 பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் சுற்றுகளில் ஒன்றான தேசிய ஆடை போட்டி நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வலம் வருவார்கள். இந்த போட்டியில் இந்தியா சார்பில் திவிதா ராய் கலந்துக் கொண்டார். அவர் இறக்கைகளுடன் கூடிய அற்புதமான தங்க நிற லெஹங்கா அணிந்து வந்தது, மிகவும் தனித்துவமான பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தது. 

அவரது உடை வடிவமைப்பு நாட்டின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் செல்வத்தின் சின்னமாக விளங்கும் இந்தியாவை தங்கப் பறவையாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் லிவா பிரபஞ்ச அழகி (லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்) போட்டி நடந்தது. அதில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகி திவிதா ராய் லிவா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அந்த விழாவில் 2021 ஆம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற ஹர்னாஸ் கவுர் சந்து கவுரவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | முகம்சுளிக்கும் படியான மானுஷி சில்லரின் கவர்ச்சி புகைப்படம்: See pic

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News