ஹிலாரி-டிரம்ப் இடையே நேரடி விவாதம் ஆரம்பம்!!

Last Updated : Sep 27, 2016, 09:11 AM IST
ஹிலாரி-டிரம்ப் இடையே நேரடி விவாதம் ஆரம்பம்!! title=

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் துவங்கியது.

குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் துவங்கியது.

விவாதத்தின் போது ஹிலாரி-டிரம்ப் பேசியதாவது:-

ஹிலாரி:-  நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அமல்படுத்தப்படும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும். புதிய திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு. வரிச்சலுகைகளை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும். ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். ஆனால் டிரம்ப் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே ஆதரவளிப்பார் என ஹிலாரி பேசினார்.

டிரம்ப்:-  தங்கள் சொந்த நாட்டில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனர்களும், மெக்ஸிகர்களும் அதிக அளவில் பயன் அடைகின்றன. எனவே அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். அமெரிக்கர்களுக்கு முதலிடம் வழங்கப்படும். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி வெளியுறவு அமைச்சராக இருந்த போது அமெரிக்காவுக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை. வரிச்சலுகை ஏற்படுத்துவது மூலம் மக்கள் பயனடைவார்கள் என கூறினார்.

Trending News