புதுடெல்லி: கொரோனா வைரஸால் சர்வதேசமும் அதிர்ந்து போன நிலையில், அதன் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
சீனாவின் வூஹானில் தொடங்கிய கொரோனாவின் களியாட்டம் இன்றும் தொடர்கிறது என்றாலும் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.
கோவிட் தடுப்பூசி, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு என பல காரணிகள் கொரோனாவின் தாக்கத்தையும் பலி எண்ணிக்கையையும் குறைத்துள்ளது.
ஆனால் உண்மையில் உலகில் கோவிட் இறப்பு எண்ணிக்கை பதிவாகியதை விட மூன்று மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) கூறுவது கொரோனாவின் தீவிரத்தையும் அதன் தாக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இது தொடர்பான அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமையன்று வெளியிட்டது.
மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா
அதன் மதிப்பீடுகளின்படி, கோவிட் வைரஸ் 2020 மற்றும் 2021 இல் 13.3 மில்லியன் முதல் 16.6 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது.
இதுதான் "அதிகப்படியான இறப்பு" என்று விவரிக்கும் WHO, கோவிட் நோயின் "நாக்-ஆன் விளைவுகளால்" ஏற்படும் இறப்புகளைச் சேர்த்து இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகிறது.
அதாவது உலக சுகாதார அமைப்பு, COVID-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை, உண்மையில் வைரஸுக்குக் காரணமான அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்பது உண்மையில் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதிலும், கோவிடுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் 84 சதவீதம், தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக WHO கூறியது.
மேலும் படிக்க | சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் போது: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு
“உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய மதிப்பீடுகள் 1 ஜனவரி 2020 மற்றும் 31 டிசம்பர் 2021 க்கு இடையில் கோவிட் தொற்றுநோயுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை தோராயமாக 14.9 மில்லியனாக இருந்தது” என்று ஐநா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகப்படியான இறப்பு என்பது சாதாரண நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்படும் இறப்புகளுடன் ஒப்பிடும்போது நெருக்கடியின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் என வரையறுக்கப்படுகிறது.
COVID-19 தொற்றால் ஏற்பட்டிருக்கும் வழக்கத்திற்கு அதிகமான இறப்பு வைரஸால் நேரடியாகக் கூறப்படும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு இடையூறு அல்லது பயண இடையூறுகள் போன்ற மறைமுக தாக்கம் ஆகிய இரண்டிற்கும் காரணமாகிறது.
"இந்த நிதானமான தரவுகள் தொற்றுநோயின் தாக்கத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன, வலுவான சுகாதார தகவல் அமைப்புகள்அவசியம் என்பதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நெருக்கடி சமயத்தின்போது அத்தியாவசிய சுகாதார சேவைகள் எவ்வளவு அவசிய என்பதையும், சுகாதார அமைப்புகளில் அனைத்து நாடுகளும் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த இறப்பு எண்ணிக்கை சுட்டிக்காட்டுகின்றன" என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
இந்த நிலையில் மாறிவரும் கொரோனா வைரஸின் அடுத்ததடுத்த பிறழ்வுகள் உலகின் பல இடங்களில் நோயை பரப்பி வரும் நிலையில், இந்தியாவில் 4வது அலை வருமா என்ற அச்சங்கள் எழுந்துள்ளது. கொரோனாவின் நான்காவது அலையை (Corona fouth wave) எதிர்கொள்ளக் கூடும் என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தொற்று
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR