அதிக மைலேஜ்... குறைவான விலை... இந்தியாவின் மலிவான SUV கார் இது தான்...

இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது எளிதாகி விட்டது. நல்ல வசதிகளும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் வாங்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. அதோடு, எரிபொருள் சிக்கனமும் தேவை. அந்த வகையில் உங்கள் கனவை நிறைவேற்றும் சிறந்த SUV வாகனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 11, 2024, 12:23 PM IST
  • உங்கள் கனவை நிறைவேற்றும் சிறந்த SUV வாகனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • இந்தியாவில் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • பணத்திற்கான மதிப்பை வழங்கும் காம்பாக்ட் SUV வகை கார்.
அதிக மைலேஜ்... குறைவான விலை... இந்தியாவின் மலிவான SUV கார் இது தான்... title=

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை ஈர்க்க, பல புதிய மாடல் கார்களை போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது எளிதாகி விட்டது. நல்ல வசதிகளும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் வாங்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. அதோடு, எரிபொருள் சிக்கனமும் தேவை. அந்த வகையில் உங்கள் கனவை நிறைவேற்றும் சிறந்த SUV வாகனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

டாடா பஞ்ச்: 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு

இப்போது இந்தியாவில் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு கார் நிறுவனங்களும் ஏராளமான பாதுகாப்பு அம்சஙக்ளையும் வசதிகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டாடா பஞ்ச் (Tata Punch) உங்களுக்கான சிறந்த காராக இருக்கும். ரூ.6.13 லட்சத்தில் கிடைக்கும் இந்த இந்த கார், உண்மையிலேயே பணத்திற்கான மதிப்பை வழங்கும் காம்பாக்ட் SUV வகை கார் (TATA SUV Car) என்றால் மிகையில்லை.

சக்திவாய்ந்த எஞ்சின், சிறந்த மைலேஜ் கொடுக்கும் டாடா பஞ்ச்

டாடா பன்ச் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.82 கிலோமீட்டர் மைலேஜ் தரும். 

மேலும் படிக்க | ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது?

பஞ்சில் CNG ஆப்ஷனும் உள்ளது, இதிலும் என்ஜின் ஒன்றுதான் ஆனால் பவர் மற்றும் டார்க்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. CNG மாடலில் 72.49 bhp மற்றும் 103 Nm டார்க் கொடுக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு CNG சிலிண்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 210-லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த மாடல் 27 கிமீ/கிலோ மைலேஜ் தரும்.

டாடா பஞ்ச் ஒரு வலுவான காம்பாக்ட் SUV. இது மலிவு விலையில் கிடைக்கிறது. தற்போது, ​​பஞ்ச் காம்பாக்ட் எஸ்யூவி பணத்திற்கான மதிப்பு வழங்கும் சிறந்த வாகனமாக உள்ளது. ஆனால் அதன் வடிவமைப்பு அதிகம் ஈர்க்கும் வகையில் இல்லை என்கின்றனர் சிலர். டாடா மோட்டார்ஸிடமிருந்து பஞ்சின் மேம்படுத்தப்பட்ட மாடல் சந்தையில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | நிஸான் பேட்ரோல் எஸ்யூவி காருக்கு இவ்வளவு மவுசா? சல்மான் கான் முதல் ஷாருக்கான் வரை விரும்புக் கார்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News