ஆப்பிள் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!

Apple Wegith Loss: உடல் எடையை குறைக்க உணவு  மற்றும் மன கட்டுப்பாடு அவசியம். இவை உடல் எடையை குறைக்க அதிகம் உதவி செய்யும். இவற்றால் தான் அதிகம் உடல் எடை அதிகரிக்கிறது.
1 /6

ஆப்பிள் பழத்தில் அதிக சத்து நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன. மேலும் இவற்றில் பொட்டாசியம், பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன.    

2 /6

ஆப்பிள்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. உடல் எடையை சீராக வைத்து கொள்ள ஆப்பிள் உதவுகிறது. நீரிழிவு நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.   

3 /6

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இவை வயிற்றில் முழுமை உணர்வை தந்து, அதிகம் சாப்பிடுவதை தடுத்து நிறுத்துகிறது.   

4 /6

ஆப்பிளில் கலோரிகள் அளவு குறைவாக உள்ளன. இதனை தினசரி உணவில் எடுத்து கொள்ளும் போது, திருப்திகரமான உணர்வை கொடுத்து, சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.  

5 /6

ஆப்பிள்களில் இயற்கையான இனிப்பு சத்து உள்ளது. இவை உடலுக்கு தேவையான சர்க்கரையை பூர்த்தி செய்கிறது. மேலும் இவற்றில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.  

6 /6

ஆப்பிள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆப்பிள் நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இவை எடை மேலாண்மைக்கு முக்கியமானவை.