Miss World: கத்தார் உலக அழகிப்போட்டி! 45 லட்சம் பரிசு வென்ற உலக அழகி ஒட்டகம்

Miss World Camel Beauty Contest: உலக அழகுப் போட்டியில் பங்கேற்ற அழகிய ஒட்டகங்கள்... உலக அழகிக்கு 45 லட்ச ரூபாய் பரிசு 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2022, 06:25 AM IST
  • ஒட்டகங்களின் அழகை அளவிடுவது எப்படி?
  • அளவு, தலை மற்றும் காதுகளுக்கு ஏற்ப அழகு தீர்மானிக்கப்படும்
  • ஃபிஃபா கால்பந்து திருவிழாவில் ஒட்டகங்களின் அழகுப்போட்டி
Miss World: கத்தார் உலக அழகிப்போட்டி! 45 லட்சம் பரிசு வென்ற உலக அழகி ஒட்டகம் title=

Camel Beauty Contest: கத்தாரில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட மற்றொரு போட்டியும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஒட்டகங்களின் அழகுப் போட்டி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த போட்டியில், உலகின் மிக அழகான ஒட்டகம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது. பல நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பங்கேற்றன. இந்த ஒட்டகப் போட்டி மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இந்த பிராந்தியத்தில் ஒட்டகங்கள் தலைமுறை தலைமுறைகளாக மக்களுடன் தொடர்புடையவை. இந்நிகழ்ச்சியில், அதிகபட்சமாக பால் கொடுக்கும் ஒட்டகமும் தேர்வு செய்யப்பட்டு, அதற்கும் பரிசு வழங்கப்பட்டது.

'இந்த அழகுப் போட்டி நடத்துவதற்கான திட்டமிடல் என்பது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் போன்றது. ஒட்டகங்களுக்கான உலக அழகுப் போட்டி  இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு நிகழ்வின்போதும், யாரும் நேர்மையற்ற செயல்களைச் செய்யக்கூடாது என்பதை ஏற்பாட்டுக் குழு கவனித்துக் கொண்டது’ என்று கத்தார் ஒட்டக ஜெயின் கிளப்பின் தலைவர் ஹமத் ஜாபர் அல் அத்பா தெரிவித்தார்.

மேலும் படிக்க | 'நானும் ரவுடிதான்' பேஸ்புகில் கமெண்ட்... வாண்டடாக வம்பிழுத்தவரை கொக்கிப்போட்டு போலீஸ்!

வெற்றி பெற்ற உலக அழகிக்கு என்ன பரிசு?
 
இவ்விழாவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் ஒட்டகங்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்களுக்குப் பணப் பரிசும் வழங்கப்பட்டது. நஜா என்ற ஒட்டகம் முதல் இடத்தைப் பிடித்தது, அதன் உரிமையாளருக்கு 200,000 கத்தார் ரியால்கள் (ரூ. 44,72,484) தொகை பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அதிக பால் கொடுத்த ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 15,000 ரியால் பரிசுத்தொகை கிடைத்தது.

இந்த அழகுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து ஒட்டகங்களும், போட்டிக்கு முன்னதாக முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. இந்த போட்டியின் ஒட்டகங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லையா அல்லது ஒப்பனை செய்யப்பட்டுள்ளனவா என்று சோதிக்கப்பட்டது. பல ஒட்டக உரிமையாளர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு போடோக்ஸ், ஃபில்லர்கள் மற்றும் சிலிகான்களை கொடுப்பதை கண்காணிப்புக் குழுவினர் கண்டறிந்தனர்.

கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ஒட்டக அழகுப் போட்டியில், ஒப்பனை மாற்றங்கள் காரணமாக பல ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் போட்டியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்தன.

மேலும் படிக்க | தொடரும் கரோனா கொடூரம் : கதறும் இளைஞர்... இழுத்துச்செல்லும் அதிகாரிகள்! சீனா அடாவடி

ஒட்டகங்கள் வெவ்வேறு வழிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன

வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். ஒட்டகங்களின் வயது மற்றும் இனத்தைப் பொறுத்து, அவை வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியில் ஒட்டகங்களின் அழகு வெவ்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது. உதாரணமாக, கருப்பு ஒட்டகங்கள், உடல் அளவு, தலை மற்றும் காதுகளின் அடிப்படையில் பட்டியல் இடப்படுகின்றன. 

மறுபுறம், மகதீர் காலத்தின் ஒட்டகங்களுக்கு, அவற்றின் காதுகள் கீழே வளைந்திருந்தாலும் நேராக நிற்கிறதா என்று பார்க்கப்படும். இதனுடன், இந்த வகை ஒட்டகங்களின் வாயின் வளைவு எவ்வாறு உள்ளது என்பதும் பார்க்கப்படுகிறது. அசெல் இன ஒட்டகங்களைப் பொறுத்த வரை, அவை சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் காதுகள், அழகுக்கான முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News