சீன வர்த்தகத்தின் இருண்ட பக்கம்: சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. வியாபார விஷயங்களில் இன்னொரு பின்னடைவைச் சந்தித்து வருகிறது . ஆகஸ்ட் மாதத்தில், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்தன. இது பலவீனமான உலகளாவிய தேவையின் அறிகுறியாகும், இது ஏற்கனவே மந்தமான பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. பொருளாதாரத்தில் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்கிறார். சீன ஏற்றுமதி நிலை குறித்து வியாழன் அன்று வெளியிடப்பட்ட கஸ்டம் டியூட்டி தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 8.8 சதவீதம் குறைந்து 284.87 பில்லியன் டாலராக இருந்தது என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 7.3 சதவீதம் குறைந்து 216.51 பில்லியன் டாலராக உள்ளது.
பணவாட்டம்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, தற்போது தீவிர சிக்கலில் உள்ளது. பொதுவாக பணவீக்கம், அதாவது பொருட்களின் விலையேற்றத்தால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. கடந்த 18 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் தலை கீழ் நிலைமை நிலவுகிறது. மக்களும் தொழில் நடத்துபவர்களும் பணத்தை செலவு செய்வதில்லை. இது பண வாட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.
மேலும் படிக்க | BRICS அமைப்பில் பாகிஸ்தானிற்கு நோ என்ட்ரி... கைவிட்ட சீனா, ரஷ்யா!
கோவிட் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம்
சீனாவின் வர்த்தக உபரி 68.36 பில்லியன் டாலராக இருந்தது, இது ஜூலையில் 80.6 பில்லியன் டாலராக இருந்தது. பொருளாதாரத்தை உயர்த்த சீனத் தலைவர்கள் சமீபத்திய மாதங்களில் பல பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிகவும் விரைவாகவே பலவீனமடைந்துள்ளது. அதிகாரிகள் இதுவரை பெரிய அளவிலான ஊக்கச் செலவுகள் அல்லது பெரிய அளவிலான வரிக் குறைப்புகளைத் தவிர்த்தனர். கேபிடல் எகனாமிக்ஸ் பத்திரிக்கையில் ஜூலியன் எவன்ஸ்-பிரிட்சார்ட் ஒரு அறிக்கையில், "முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்த ஆண்டின் இறுதியில் மீண்டு வருவதற்கு முன் ஏற்றுமதி குறையும் என்று தெரிகிறது" என்று கூறினார்.
ஏற்றுமதி இறக்குமதி இரண்டும் குறைந்துள்ளது
ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு ஜூலை மாதத்தை விட குறைவாக இருந்த போதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் வர்த்தகம் படிப்படியாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி 14.5 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி 12.4 சதவீதம் குறைந்துள்ளது. சுங்கத் தரவுகளின்படி, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 17.4 சதவீதம் சரிந்து 45 பில்லியன் டாலராக இருந்தது. அதே சமயம் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி 4.9 சதவீதம் குறைந்து கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலராக இருந்தது. ரஷ்யாவில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் (பெரும்பாலும் எண்ணெய் மற்றும் எரிவாயு) முந்தைய ஆண்டிலிருந்து 13.3 சதவீதம் அதிகரித்து 11.52 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
மேலும் படிக்க | Worlds biggest cemetery: அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்! உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ