ஆஸ்திரேலியா தீம் பார்க் விபத்து

ஆஸ்திரேலியா குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் கோல்ட் கோஸ்ட் நகரில் ’டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது.

Last Updated : Oct 25, 2016, 03:55 PM IST
ஆஸ்திரேலியா தீம் பார்க் விபத்து title=

சிட்னி: ஆஸ்திரேலியா குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் கோல்ட் கோஸ்ட் நகரில் ’டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் தன்டர் ரிவர் ரேபிட் ரைட் சவாரியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் நான்குபேர் பலியானதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

இந்த விபத்தையடுத்து டிரீம் வேர்ல்ட் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும்  மீட்புப்படை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து. 

மேலும் நான்குபேர் காயமடைந்த இந்த விபத்துக்கான காரணம் மற்றும் விளக்கம் ஏதும் தெளிவாக வெளியிடப்படாத நிலையில் குவீன்ஸ்லேன்ட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News