#CWG_2018: இந்தியாவிற்கு 7-வது தங்கம் பெற்றார் மனிகா பாட்ரா!

ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான 7-வது தங்கப்பதக்கம் கிடைத்தது!

Last Updated : Apr 8, 2018, 06:27 PM IST
#CWG_2018: இந்தியாவிற்கு 7-வது தங்கம் பெற்றார் மனிகா பாட்ரா! title=

ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான 7-வது தங்கப்பதக்கம் கிடைத்தது!

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான 7-வது தங்கப்பதக்கத்தினை, டேபில் டென்னிஸ் வீராங்கறை மனிகா பாட்ரா பெற்று தந்தார்.

டேபில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியினை எதிர்கொண்டது. இப்போட்டியில் சிங்கப்பூரின் த்யான்வெய் பென்ஞ்-னை இந்திய வீராங்களை மனிகா பாட்ரா எதிர்கொண்டார். இப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று இந்தியாவிற்கு தங்கம் வென்றார்.

இது இந்தியாவிற்கு கிடைத்த 7-வது தங்கம் ஆகும். மேலும் இதுவரை இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இதற்கு முன்னதாக பதக்கம் வென்றவர்கள் பட்டியல்...

Trending News