திருப்பத்தூர் அருகே தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தக்கூடாது எனக் கூறியதற்காக தந்தை, மகனை கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய போதை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண், ஒரே மாதத்தில் பயிற்சி எடுத்து பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளிச் சென்று சாதனை புரிந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் சென்டர் மீடியனில் மோதி தலை துண்டாகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் திமுக பேருராட்சித் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி மற்ற திமுக கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் கணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.